பிரபல நடிகரின் மகள் ஆராய்ச்சி... கோரோனாவை கட்டுப்படுத்த பள்ளி மாணவர்களுக்கு இதை செய்யணும்!
முகப்பு > சினிமா செய்திகள்உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பிரபல ஊட்டச்சத்து நிபுணர் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரசாங்க பள்ளிகளில் தான் மேற்கொண்ட ஆய்வின் மூலம் 40 சதவீத பெண்களுக்கும், 38 சதவீத ஆண் பிள்ளைகளுக்கும் இரும்புச்சத்து குறைவாக இருந்ததை கண்டறிந்ததாக கூறியுள்ளார். தற்போது பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் பிள்ளைகளுக்கு இரும்பு சத்து குறைந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
எனவே அரசாங்கம் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் வீடுகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். காரணம் இரும்புச்சத்து குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதன் மூலம் கொரோனா வர வாய்ப்பு அதிகம் என்பதால் அரசுக்கு இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.