www.garudabazaar.com

பூவையார் வாங்கிய விலையுயர்ந்த கார்.. விலை எம்புட்டு? அப்படி என்ன ஸ்பெஷல்? முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் பாடகராக வலம் வருபவர் 14 வயதாகும் பூவையார்.

Poovaiyar Bought a TATA Punch Car Price Specifications

Also Read | பாடகி சைந்தவியின் புதிய பரிமாணம்.. சென்னையில் இன்னொரு அல்ட்ரா மாடர்ன் ரெகார்டிங் ஸ்டுடியோ.!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பூவையார். 2019 ஆம் ஆண்டு வெளிவந்த பிகில் திரைப்படத்தில் வெறித்தனம் பாடலை ரஹ்மான் இசையில் பாடியிருந்தார்.

பின்னர் பிகில் & மாஸ்டர் படங்களில் நடிகர் விஜய்யுடன் நடித்திருந்தார்.

தற்போது பூவையார், தனி ஆல்பம் மற்றும் வெளிநாடு மற்றும் உள்நாட்டு கச்சேரிகளில் பங்கேற்று வருகிறார். பாடகர் பூவையார் தற்போது புதிய கார்  ஒன்றை வாங்கியுள்ளார். 

Poovaiyar Bought a TATA Punch Car Price Specifications

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து ''மக்களே எங்களோட புதிய கார் நீங்கள் இல்லயே நான் இல்லை உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு எப்போமே இருக்கணும் எல்லாருக்கும் நன்றி & கடவுளுக்கு நன்றி எல்லாம் புகழும் ஆண்டவனுக்கு'' என பூவையார் பதிவிட்டுள்ளார்.

பூவையார் வாங்கிய கார் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் (TATA Punch) கார் ஆகும். இந்த கார் சுமார் 5.93 லட்சம் ரூபாய் முதல் 9.49 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.

Poovaiyar Bought a TATA Punch Car Price Specifications

5 பேர் அமரக்கூடிய வகையில், ஏர் பேக் வசதியுடன் கூடிய இந்த கார்  பெட்ரோல் மூலம் இயங்கக் கூடியது. லிட்டருக்கு 18.9 கிலோ மீட்டர் மைலேஜ் தரவல்லது.

37 லிட்டர் பெட்ரோல் கொள்ளளவு கொண்டது. 3 சிலிண்டர் உடைய 1200 சிசி இன்ஜின் கொண்டது.

 

Also Read | Bigg boss 6 tamil : "இந்த ஆட்டமே தப்பு.." கலகலவென ஜிபி முத்து மைக் Task-ல கொந்தளிச்சுட்டாரேப்பா..!

Poovaiyar Bought a TATA Punch Car Price Specifications

People looking for online information on Poovaiyar, Poovaiyar Bought TATA Punch Car, Super Singer Poovaiyar, TATA Punch Car, TATA Punch Car Price Specifications will find this news story useful.