www.garudabazaar.com

'பார்டர்' பட ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் தந்தை மரணம்... இறுதி சடங்கில் பங்கேற்ற அருண் விஜய்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அருண் விஜய் நடிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கும் பார்டர் படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் விஜய ராகவேந்திரா தயாரிக்கிறார். 

borrder movie dop rajasekar father passed away

சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்துக்கு  ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகைகள் ரெஜினா கேசண்ட்ரா, ஸ்டெஃபி படேல் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகிறது.

borrder movie dop rajasekar father passed away

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் தந்தை மா. பாலசுப்ரமணியம் மாரடைப்பால் 18.09.2021 அன்று காலமானார். இவர் ஓவிய கல்லூரியின் முதல்வராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

borrder movie dop rajasekar father passed away

இந்த துக்க நிகழ்வுக்கு வருகை தந்து இறுதிசடங்கு முடியும்வரை ஒளிப்பதிவாளர் ராஜசேகருடன் இருந்து நடிகர் அருண் விஜய் ஆறுதல் கூறினார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் குறிப்பிட்டு டிவீட் செய்துள்ளார். 

Tags : Arun Vijay

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

borrder movie dop rajasekar father passed away

People looking for online information on Arun Vijay will find this news story useful.