Michael Coffee house
Reliable Software
www.garudabazaar.com

ரோட்டில் ஜாலியாக குதிரை ஓட்டி கலாய்த்த பாலா... ரசிகர்களை கவர்ந்த காமெடி வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

cooku with comali bala funny video with horse ஜாலியாக குதிரை ஓட்டி கலாய்த்த பாலா

குக் வித் கோமாளி சீசன் 2 தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 14-ம் தேதி 4 மணி நேர தொடர் ஒளிபரப்பாக இந்நிகழ்ச்சியின் பைனல்ஸ ஒளிபரப்பப்பட்டது. மேலும் ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு, சந்தோஷ் நாராயணன், அறிவு, தீ உட்பட பல பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மக்களும் குக் வித் கோமாளி சீசன் முடிந்து விட்டதே என்ற சோகத்தில் தான் இருக்கின்றனர். கலாய், கவிதை, ரைமிங் ஜோக் என மேடையை தெறிக்கவிடும் பாலா தற்போது ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ரோட்டில் ஜாலியாக குதிரை ஓட்டி கலாய்க்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குக் வித் கோமாளியை மிஸ் செய்யும் ரசிகர்களுக்கு இதுபோன்ற வீடியோக்கள் சற்று ஆறுதலாக இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

ரோட்டில் ஜாலியாக குதிரை ஓட்டி கலாய்த்த பாலா... ரசிகர்களை கவர்ந்த காமெடி வீடியோ..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

cooku with comali bala funny video with horse ஜாலியாக குதிரை ஓட்டி கலாய்த்த பாலா

People looking for online information on Bala, Cooku with comali will find this news story useful.