Reliable Software
www.garudabazaar.com

குக் வித் கோமாளி பாலாவின் உண்மை முகம்... வேகமாக பரவும் வீடியோ.. நெகிழ்ந்து போன நெட்டிசன்ஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சி வாராவாரம் சுவாரசியம் குறையாமல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. கோமாளிகள் மட்டுமல்லாது போட்டியாளர்களும் சேர்ந்துகொண்டு செய்யும் ரகளைகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அதிலும் பலரைப் பற்றி மக்கள் வைத்திருக்கும் பிம்பமே இந்த சீசன் 2 மூலமாக மாறியுள்ளது. சீரியஸான மனிதர்களாக இருப்பார்கள் என்று நினைத்த பலரும் மிகவும் எளிமையான, சுவாரசியமான, ரசிக்கக்கூடிய மனிதர்களாக இருப்பதை பார்க்க முடிகிறது. அதேபோல் கோமாளிகள் உடனே போட்டியாளர்கள் பழகும் விதமும் ரசிக்கும்படி உள்ளது.

Cooku with comlai bala heartmelting video கோமாளி பாலாவின் உண்மை முகம்

இந்நிலையில் கடந்த சீசன் கோமாளிகளான புகழ், பாலா, மணிமேகலை, ஷிவாங்கி போன்றோர் இந்த சீசனிலும்  பங்கெடுத்துள்ளனர். குக் வித் கோமாளி சீசன் 2 கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. எனினும் இந்த சீசன் பலருக்கும் எப்போது பேவரைட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படியே தனது டைமிங் காமெடிகளாலும், ரைமிங் டையலாக்குகளாலும் ரசிகர்களை கவர்ந்தவர் பாலா.

கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவியில் நுழைந்த அவர் படிப்படியாக தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே சேர்த்துள்ளார். இந்நிலையில் பாலாவின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சாலை ஓரத்தில் அமர்ந்திருக்கும் வயதான பாட்டிக்கு தனது கையால் உணவு வாங்கிக் கொடுத்ததும் அல்லாது, சரிக்கு சமமாக தெருவில் அமர்ந்து அவருடன் பேசி ஆறுதல் படுத்தி விட்டு நகர்கிறார். இதை பார்த்த பலரும் பாலாவுக்கு இப்படி ஒரு நல்ல மனது இருக்கிறதா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags : Bala

தொடர்புடைய இணைப்புகள்

Cooku with comlai bala heartmelting video கோமாளி பாலாவின் உண்மை முகம்

People looking for online information on Bala will find this news story useful.