Trigger D Logo Top
Naane Varuven M Logo Top
www.garudabazaar.com

VIKRAM VEDHA: பிரபல தமிழ் இசையமைப்பாளருடன் ஹிருத்திக் ரோஷன்.. சூப்பர் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியில் உருவாகும் விக்ரம் வேதா படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Sam CS with Hrithik Roshan Vikram Vedha BGM Score Work

Also Read | சல்மான் கானுடன் தாறுமாறான டான்ஸ் ஆடிய சிரஞ்சீவி! சாதனை படைக்கும் காட்பாதர் படத்தின் LYRICAL VIDEO!

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் தமிழில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.

இந்த படத்தை இந்தியில்  இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கி உள்ளனர். புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர்.

Sam CS with Hrithik Roshan Vikram Vedha BGM Score Work

தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு  (15.10.2021) அன்று துபாயில் தொடங்கியது. பின்னர் லக்னோவில் நடைபெற்றது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

Sam CS with Hrithik Roshan Vikram Vedha BGM Score Work

ஏற்கனவே இந்த படத்தின் டீஸர், டிரெய்லர் & போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.

இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும்  செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் சாம் CS தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து படத்தின் பின்னணி இசை பணிகளை நிறைவு செய்து விட்டதாக கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள்  தற்போது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகின்றன.

Sam CS with Hrithik Roshan Vikram Vedha BGM Score Work

இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல கலர்ஸ் சினிப்ளக்ஸ் சேனல் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தின் ஆடியோ உரிமத்தை டி- சீரிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Also Read | தனுஷ் நடிக்கும் 'நானே வருவேன்'.. ரிலீஸை ஒட்டி சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம்!

தொடர்புடைய இணைப்புகள்

Sam CS with Hrithik Roshan Vikram Vedha BGM Score Work

People looking for online information on Hrithik Roshan, Saif Ali Khan, Vikram Vedha, Vikram Vedha Movie Hindi will find this news story useful.