Yaanai

இங்கிலாந்து சாலையில் ரசிகர்களை சந்தித்த நடிகர் அஜித்.. இணையத்தை கலக்கும் செம போட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐரோப்பாவில் நடிகர் அஜித் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Ajith Kumar meet fans at London Hatton Cross Station

Also Read | Most Waiting ’பத்தல பத்தல’ பாடலின் வீடியோ ரிலீஸ்… வெளியான மாஸ் அப்டேட்

நடிகர் அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு  அஜித் ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் சில புகைப்படங்களை வெளியிட்டார். ஐரோப்பா நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் தற்போது நடந்து வருகிறது. இங்கிலாந்தில் தொடங்கிய சுற்றுப்பயணம்  பெல்ஜியம் நாட்டில் நடந்து தற்போது பிரிட்டனில் நடந்து வருகிறது.

Ajith Kumar meet fans at London Hatton Cross Station

இந்நிலையில் பிரிட்டன் லண்டன் நகர வீதிகளில் (ஹேட்டன் கிராஸ் நிலையம்) ரசிகர்களுடன் அஜித் எடுத்த இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இன்னொரு புகைப்படத்தில் வணிக வளாகத்தில் அஜித் ரசிகர்களுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

Ajith Kumar meet fans at London Hatton Cross Station

AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு  ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | "சில்லுனு ஒரு காதல்' படத்தை 2022ல எடுத்தா பட்ஜெட் ரூ 110 கோடி".. - தயாரிப்பாளர் சூப்பர் தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar meet fans at London Hatton Cross Station

People looking for online information on Ajith Kumar, Ajith kumar Fans, Ajith Kumar meet fans, Ajith Kumar meet fans at London will find this news story useful.