www.garudabazaar.com

பொன்னியின் செல்வன் - 2.. இசைப்புயலின் மேஜிக்.. வெளியானது Glimpse வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொன்னியின் செல்வன் படத்தின் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் Glimpse வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாகி வருகிறது.

Ponniyin selvan 2 AR Rahman Glimpse video Released

                           Images are subject to © copyright to their respective owners.

பொன்னியின் செல்வன்

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது.

Images are subject to © copyright to their respective owners.

PS-2

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த பொன்னியின் செல்வன் படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில்  பொன்னியின் செல்வன் - 2 படத்தின் டிரெய்லர் வரும் மார்ச் மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

வீடியோ

இந்த சூழ்நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளது. அதில் பொன்னியின் செல்வன் படத்தில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் பின்னணி பாடகர்களான ஸ்வேதா மோகன், சின்மயி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இந்த பதிவில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 29 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் நடைபெற இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Ponniyin selvan 2 AR Rahman Glimpse video Released

People looking for online information on AR Rahman, Ponniyin Selvan, PS-2 will find this news story useful.