Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

'ரூல்ஸ் ஒண்ணுதான்'.. பின்னோக்கி போன கார்! போலீஸாருக்கும் துல்கருக்கும் குவியும் பாராட்டு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தவறுதலான ரூட்டில் வந்த நடிகர் துல்கர் சல்மானின் காரை டிராபிக் போலீஸார் மீண்டும் பின்னாலேயே சென்று மாற்றுப் பாதைக்கு திருப்பி விட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

police man diverts dulquar salman car to right directions

சட்டம் எல்லாருக்கும் பொதுவானதுதான் என்பதை நிரூபிக்கு வகையில், டிராபிக் போலீஸார் ஒருவர் துல்கர் பயணித்துவந்த துல்கரின் காரை தவறுதலான பாதையில் வந்ததால், காரை மடக்கி சரியான மாற்றுப்பாதைக்கு சென்று முறையாக வரச்சொல்லி அறுவுறுத்தியுள்ளனர்.

இதைக் கேட்ட நடிகர் துல்கர் சல்மானும், தான் ஒரு நட்சத்திர அந்தஸ்து கொண்டவர் என்பது போன்ற கர்வங்கள் ஏதும் இல்லாமல், தன்மையுடன் போலீஸார் கூறிய அறிவுரையை அழகாக ஏற்றுக்கொண்டு மாற்றுப்பாதையில் பயணித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. யாராக இருந்தாலும் விதிகளை கடைபிடிக்க அறிவுறுத்திய காவலருக்கும், காவலருடன் வாக்குவாதம் செய்து முரண்படாமல், இன்னும் நேராக சென்றாலே சரியான பாதைக்கு சென்றுவிடலாம் எனும் சூழ்நிலையிலும் காரில் பின்னோக்கி பயணித்து மாற்றுப்பாதையில் பயணித்த துல்கருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

அண்மையில் தான் தேசிங்கு இயக்கத்தில் துல்கர் சல்மான் , ரிது வர்மா நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் நிறைவடந்தது. இதற்கு நன்றி தெரிவித்து ஒரு நினைவு குறிப்பை துல்கர் சமூக வலைதளத்தில் பதிவாக போட்டிருந்தார். இதேபோல், அந்த படத்தில் ரக்‌ஷனுக்கு ஜோடியாக நடித்த நிர்ஞ்சனா அகத்தியனுக்கும் அப்படத்தின் ச்ர்இயக்குநர் தேசிங் பெரியசாமிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.

ALSO READ: 'என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா!'.. தரமான சம்பவம் .. வெளியான நெஞ்சம் மறப்பதில்லை பாடல்!

'ரூல்ஸ் ஒண்ணுதான்'.. பின்னோக்கி போன கார்! போலீஸாருக்கும் துல்கருக்கும் குவியும் பாராட்டு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

police man diverts dulquar salman car to right directions

People looking for online information on Dulquer Car, Dulquer salmaan, Kerala, Trending, Viral will find this news story useful.