Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

VIDEO: 'என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா!'.. தரமான சம்பவம் .. வெளியான நெஞ்சம் மறப்பதில்லை பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

செல்வராகவனின் படங்களுக்கு தனி ரசிகர்கள் உண்டு. அவரது படங்களில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமுமே தனி முத்திரையை பதித்தவை.

En Pondatti oorukku poitta Nenjam Marappathillai SJSuryah

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி என ஒவ்வொரு படங்களில் அவரது கதாபாத்திர வடிவமைப்புகள் தனி கவனம் பெறுவதுண்டு. இதே போல் எஸ்.ஜே. சூர்யா இயக்கிய வாலி உள்ளிட்ட த்ரில்லர் படத்தில் தல அஜித்தின் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஒரு கேரக்டரில் காண முடியும்.

ஸ்பைடர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஒரு தேர்ந்த சைகோ பாத்திரத்தை நியாயம் செய்திருந்தார். இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நடித்துள்ள எஸ்.ஜே. சூர்யா ஒரு மிரட்டும் கிரேஸியான மனநிலை கொண்ட கொலைகாரராக டிரெய்லரில் தென்படுகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வேற லெவல் நடிப்பில், “என் பொண்டாட்டி ஊருக்கு பொயிட்டா” பாடல் வெளியாகியுள்ளது. அக்னி நட்சத்திரம் படத்தில் ஜனகராஜ்  தன் மனைவி தங்கமணி ஊருக்கு போகும் வரை அழுதுவிட்டு மனைவி ஊருக்கு பஸ் ஏறியதும் சொல்லும் பிரபலமான வசனம் தான் இது. இப்போது இந்த வசனத்தின் பெயரில் உருவாகியுள்ள இந்த பாடல் திருமணமான ஆண்களின் மத்தியில் வைரலாகி வருகிறது. 

 

மார்ச் 5-ஆம் தேதி வெளியாகும் இந்த த்ரில்லர் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுடன் நந்திதா ஸ்வேதா, ரெஜினா கேசண்ட்ரா நடித்துள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

En Pondatti oorukku poitta Nenjam Marappathillai SJSuryah

People looking for online information on EnPondattioorukkupoitta, Nenjam Marappathillai Tamil, Selvaraghavan, Sj suryah, Yuvan Shankar Raja will find this news story useful.