www.garudabazaar.com
iTechUS

துணிவு படத்தில் இடம்பெறாத தீம்.. தெறிக்கவிடும் முழு OST இசைத்தொகுப்பு! ஜிப்ரான் சம்பவம் 💥

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் இசைத் தொகுப்பு வெளியாகி உள்ளது.

Ajithkumar Ghibran Thunivu Original Sound Track Released

Images are subject to © copyright to their respective owners.

Also Read | வாரிசு படத்தின் 300 கோடி வசூல் சாத்தியமா?.. பத்திரிகையாளர் செய்யாறு பாலு EXCLUSIVE தகவல்!

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

Images are subject to © copyright to their respective owners.

'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது. டார்க் டெவில் என அழைக்கப்படும் அஜித் கதாபாத்திரம், ஒரு நோக்கத்துக்காக வங்கியை கொள்ளையடிக்க முயற்சிக்கும் போது ஏற்படும் சம்பவங்களை அடிப்படையை கதைக்கருவாக கொண்டது துணிவு திரைப்படம்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

துணிவு படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. சேட்டிலைட் உரிமத்தை பிரபல கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது. மேலும் ஆடியோ உரிமத்தை ஜி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் துணிவு படத்தின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் இசைத்தொகுப்பு வெளியாகி உள்ளது. 33 இசைக்கோர்வைகள் இந்த ஒரிஜினல் சவுண்ட் ட்ராக்கில் உள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

படத்தில் இடம் பெறாத "அந்தோனி மீம் தீம்" இந்த ஆல்பத்தில் இடம் பெற்றுள்ளது. AK, The Heist is Mine, A Man on a Mission, No Guts No Glory, அயோக்கியர்களின் ஆட்டம், Kanmani Theme, தல செதறும், The Escape Plan, Devil in The Vault, Madness, Chilla On a Chair, The Flash Boys, வில்லன்டா, எண் ஒன்றை அழுத்தவும், அடி சரவெடி, பவர் ஆபிசர் பவர், The First Heist, The Submarine, Kanmani's Last Wish, The Scam, Hopeless Whistleblower, AC' Plan Turmoils, Kiss Rule, The Chairman's Plan, Queries of a Common Man, The Your Bank Message, நம்பற மாரியே இல்லையே, The Commondos, Commissioner Arrives, True Injustice, ஹர்ஷா ஷோவுக்கு வரவும், WA*** செய்றோம் ஆகிய தீம் இசைகள் இந்த தொகுப்பில் உள்ளன.

Also Read | பிரபல நிறுவனத்திற்கு தொடர்ந்து 3 படங்கள் நடிக்கும் அஜித்குமார்?!.‌. செய்யாறு பாலு EXCLUSIVE!

தொடர்புடைய இணைப்புகள்

Ajithkumar Ghibran Thunivu Original Sound Track Released

People looking for online information on Ajith Kumar, Ghibran, H Vinoth, Thunivu, Thunivu Original Sound Track will find this news story useful.