நடிகர் விஜய்யின் தளபதி 64 படத்தில் இணைந்த 'கைதி' பட வில்லன்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 01, 2019 08:05 PM
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 64' படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும், சாந்தனு, ஆண்ட்ரியா, ஆண்டனி வர்க்கீஸ், ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம் சேத்தன், அழகம் பெருமாள் சுனில் ரெட்டி, விஜே ரம்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் சேட்டிலைட் ரைட்ஸை சன் டிவி கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு தரப்பு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி இந்த படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 'கைதி' பட வில்லன் அர்ஜூன் தாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார்.