''வா மச்சினு லோகேஷ் கனகராஜ்...'' - 'தளபதி 64'ல் நடிப்பது குறித்து பிரபல நடிகர் ட்வீட்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 02, 2019 09:39 AM
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'கைதி' படத்தில் வில்லனாக தனது கரகர குரலால் ரசிகர்களை கவர்ந்தவர் அர்ஜூன் தாஸ். இவர் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் 'தளபதி 64' படத்தில் நடிக்கவிருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து அர்ஜூன் தாஸ் உருக்கமான அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார். அதில், ''எனக்கு சொல்வதற்கு வார்த்தையில்லை. நீங்கள் ஏதாவது ஒன்றை முழு மனதுடன் நினைத்தால் இந்த முழு பிரபஞ்சமும் உங்களுக்காக நிகழத்தும். இது நிஜமாகும் என்று நான் எப்பொழுதும் நினைத்துக் கூட பார்த்ததில்லை.
புதுமுகமான எனக்கு விஜய் சார் மற்றும் விஜய் சேதுபதியுடன் பணிபுரிவது என்பது தூண்டுகோளாக இருக்கும். 'கைதி' படத்துக்கு பிறகு நான் 'தளபதி 64' படத்தில் இருக்கிறேனா? என்று மக்கள் கேட்டார்கள். ஆனால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'வா மச்சி வெல்கம் தளபதி 64 டீம் என சொல்கிற வரைக்கும் அது பற்றி எதுவும் தெரியாது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் சார்பாக சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க, விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, ஆண்டனி வர்க்கீஸ், ஸ்ரீமன், பிரேம், கௌரி கிஷன், ஸ்ரீநாத் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.
— Arjun (@iam_arjundas) December 1, 2019