பாவனி இப்ப உங்களுக்கு Wife-ஆ? Friend-ஆ? .. Ex காதலர் சொன்ன நெகிழவைக்கும் பதில்!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பாவனி ரெட்டி. 4, 5 வருடம் முன்பு தனது கணவரை பிரிந்த பாவனி ரெட்டி தற்போது பிக்பாஸ் 5வது சீசனின் போட்டியாளராக இருக்கிறார். முன்னதாக கதை சொல்லும் டாஸ்கில் பாவனி ரெட்டி தன் முழு கதையை கூறியிருந்தார்.
அதில் டான்சர் பிரதீப்புடன் காதல் திருமணம் செய்துகொண்டது, பின்னர் சீரியலுக்கு முயற்சி பண்ணியது, ஒரு கட்டத்தில் மது அருந்திவிட்டு தனது கணவர் காரணம் ஏதும் சொல்லாமல் தற்கொலை செய்துகொண்டது, அதனால் தான் துவண்டு போனது, ஊரார் அனைவரும் தன்னையும் தன் அண்ணன் போல் பழகியவரையும் சேர்த்து வைத்து பேசிய போதிலும் கணவரின் குடும்பம் தன்னை அரவணைத்தது உட்பட அனைத்தையும் உருக்கமாக கூறியிருந்தார்.
குறிப்பாக அதன் பிறகும் ஒரு உறவு உண்டானதாகவும், ஆனால் அது திருமணத்தில் சென்று முடியவில்லை என்றும், வாழ்நாள் முழுக்க தனிமைதான் தன் நிலை என்றும் உருக்கமாக பேசியிருந்தார். இதனிடையே பாவனி 2-வதாக ஒரு நபரை திருமணம் செய்துகொண்டதாக பேச்சுகள் எழுந்தன.
ஆனால், பாவனியின் சகோதரி சிந்து இதுகுறித்து ஒரு விளக்கத்தை பதிவிட்டார். அதில், பாவனியின் மறுமணம் குறித்த தகவல்கள் வதந்தி என்றும், பிரதீப்பின் தற்கொலைக்கு பின் பாவனி மறுமணம் செய்யவில்லை என்றும், அதே சமயம், பாவனி சமீப காலமாக வேறு ஒருவரை விரும்பியதாகவும், அவரது விருப்பப்படி நல்ல வாழ்க்கையை அமைத்து தரவே விரும்பியதாகவும், ஆனால் சில காரணங்களால் பாவனியும் அவருடைய காதலரும் பரஸ்பர புரிதலுடன் சுமூகமாக பிரிந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில் பாவனியின் அந்த சமீப கால முன்னாள் காதலர் ஆனந்த் ஜாய் இன்ஸ்டாவில் தொடர்ந்து, “பாவனி உலகிலெயே அழகான பெண். அவருக்கு சப்போர்ட் பண்ணுங்கள்.. துர்கா என்கிற அந்த பாவனி என் தோழி மட்டும் அல்ல. அதற்கும் மேலானவர். பிக்பாஸில் கலந்துகொண்டிருக்கும் அவருக்கு ஆதரவு தாருங்கள்!” என தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் ரசிகர் ஒருவர், “தற்போது பாவனி உங்களுக்கு மனைவியா? தோழியா?” என கேட்க, அதற்கு பதில் அளித்துள்ள ஆனந்த் ஜாய், “பவானி தனக்கு அம்மா” என குறிப்பிட்டு நெகிழ வைத்துள்ளார். பிரேக் அப்-க்கு பிறகும் இப்படி தொடர்ந்து பாவனிக்கு சப்போர்ட் செய்து வரும் ஆனந்த் ஜாயினை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த வருடம் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் மற்றும் வீட்டுக்கு வெளியில் இருந்து பார்க்கும் ஆடியன்ஸ் என பலராலும் விரும்பப்பட்டு வரும் பாவனி ரெட்டியை, அண்மையில் பிக்பாஸ் வீட்டுக்குள் நடந்த எலிமினேஷன் நாமினேஷனில் கூட ஹவுஸ்மேட்ஸ் யாரும் நாமினேட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Reason Behind Housemates Nominates Niroop Eviction Biggbosstamil5
- Biggbosstamil5 Eviction Nominates For Imman And Isaivani
- Biggbosstamil5 House Leader Thamarai Selvi Chinna Ponnu Conflict
- Biggbosstamil5 Iman Abhinav Niroop Clash Leader Thamarai Selvi
- Biggbosstamil5 Like Dislike Task For Housemates பிக்பாஸ் தமிழ்
- Is This Reason For Namitha Marimuthu Went Out Biggbosstamil5
- Namitha Thamarai Selvi First Conflict Biggbosstamil5
- Pavani Reveals Her Husband Death Full Story Biggbosstamil5
- Raju And Akshara Teases Abishek New Look Biggbosstamil5
- Iman Annachi Requests Over Luxury Budget Biggbosstamil5
- Abishek Lying On Pavanis Lap In BiggBossTamil5 Raju Viral Counter
- Vijay Tv Biggbosstamil5 Suruthi First Ever Painful Story