என்ன சொல்றீங்க? ஸ்ரேயாவுக்கு குழந்தை பிறந்துருச்சா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய போஸ்ட்!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழில் “உனக்கு 20 எனக்கு 18” திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஸ்ரேயா
![Fans in shock and surprise as Shriya Saran welcomes first child Fans in shock and surprise as Shriya Saran welcomes first child](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/fans-in-shock-and-surprise-as-shriya-saran-welcomes-first-child-photos-pictures-stills.jpg)
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “சிவாஜி” படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பிரபலமானவர். கடைசியாக தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தில் நடித்திருந்தார். கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த நரகாசூரன் படம் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. தற்போது இவர் ராஜமௌலி இயக்கத்தில் RRR படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரோ கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக செய்து கொண்டிருப்பார். இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் நிலவி வந்தது.
இந்நிலையில் தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாக ஸ்ரேயா இன்ஸ்டாகிராமில் அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார். மேலும் குழந்தை 2020 ஆம் ஆண்டு லாக்டவுனில் பிறந்ததாகவும், தற்போது குழந்தைக்கு ஒருவயது ஆகுவதாகவும் தெரிகிறது. இதை ஒரு சிறு வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.