www.garudabazaar.com

“அக்கானு சொல்லி பாவனி மடியில் படுத்துகிட்டான்”.. “நானும் தம்பிதானே?” - கேட்டது யாரு பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5-ல் 18 போட்டியாளர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.

Abishek lying on Pavanis lap in BiggBossTamil5 Raju viral counter

இவர்களிள் பிரபல விஜய் டிவி சீரியலில் நடித்த பாவனியும் பங்கேற்றிருக்கிறார். இதேபோல் விஜே அபிஷேக்கும் பங்கேற்றிருக்கிறார். அபிஷேக் மற்றும் பாவனிக்கு இடையிலான உரையாடல் இணையதளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் மெத்தையில் தலையணை போட்டு அதன் மீது படுத்துக் கொண்டிருக்கிறார் அபிஷேக். அந்த தலையணையை தன் மடியில் வைத்து அபிஷேக்குக்கு தலையை பிடித்துவிடுகிறார் பாவனி. அதை பார்த்த ராஜூ, இமான் அண்ணாச்சியிடம் சொல்லி,  “அங்க பாருங்க.. அவனை என்னன்னு கேளுங்க!” என்று கூற, அருகில் இருந்த சிபி சிரித்தபடி, “கோர்த்து விட்டான்” என்று கூறுகிறார்.

அப்போது இமான் அண்ணாச்சி, ராஜூ சொன்னதைக் கேட்டு அபிஷேக்கிடம் சென்று, “டேய் அவ ஏதாவது சொல்லி உன்ன அழவெப்பா” என்று கூற, அங்கு வரும் ராஜூ, “அக்காவா நானும் கூட தம்பிதானே?” என்று சொன்னதுடன் மேலும், “தம்பினா இப்படி ஒரு சலுகையா?” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுகிறார்.

மேலும் இமான் அண்ணாச்சி அபிஷேக்கை பார்த்து, “ஆவூன்னா எல்லா புள்ளைகளின் மடியிலும் சென்று படுத்துக் கொண்டு இருக்கிறாயே?” என்று கேட்கிறார். அப்போது வருண் ,சிபி, ராஜூ மூன்று பேரும் சிரித்து கொள்கின்றனர். அதில் அபினவை பார்த்து இமான் அண்ணாச்சி, “அடுத்த வாரம் இந்த சீனை, நீ பிளான் பண்ணி இருக்கியா?” என்று கேட்கிறார்.

அதற்கு அபினவ் சிரித்தபடி, “நான் ஜாலியாக ஓரமாகப் படுத்து இருக்கிறேன். என் மடியில் யார் வேணும்னாலும் படுத்துக் கொள்ளலாம். நான் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்” என்று சொல்ல அண்ணாச்சி, “உன் மடியில் ஆம்பள பையன் தான்டா படுத்து கிடக்கிறான்?” என்று கூற, அபினவ், “அதுதான் எனக்கு ஜாலியாக இருக்கு” என்கிறார். இப்படி அபிஷேக்கின் செயல் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Abishek lying on Pavanis lap in BiggBossTamil5 Raju viral counter

People looking for online information on Abhinav, Abishek pavani reddy, Akshara Reddy, அபிஷேக், இமான் அண்ணாச்சி, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggboss abishek, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImmanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Pavani Reddy, Pavani reddy abishek, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision, VJ Priyanka will find this news story useful.