www.garudabazaar.com

இரவின் நிழல் படத்தின் மேக்கிங் வீடியோ.. ரிலீஸ் எப்போ? பார்த்திபன் கொடுத்த செம அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இரவின் நிழல்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ் குறித்து பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Parthiban Iravin Nizhal Making Video Release Update

இயக்குனர் நடிகர் பார்த்திபன் 'ஒத்த செருப்பு' படத்தைத் தொடர்ந்து நடித்து இயக்கிய திரைப்படம் 'இரவின் நிழல்'. நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தில் பார்த்திபன் 'நந்து' எனும் சினிமா பைனான்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தினை பார்த்திபனின் அகிரா பிலிம் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து பயாஸ்கோப் பிலிம் ஃபிரேமர்ஸ்  தயாரித்தது. இப்படத்தில் பார்த்திபன் நாயகனாக நடிக்க, ரோபோ ஷங்கர், வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிஜிடா சகா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்தனர்.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்தார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்தார். கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று

திரையரங்குகளில் இந்த படம் வெளியானது.

இரவின் நிழல் திரைப்படம்  அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் வெளியாகி உள்ளது. இரவின் நிழல் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி சேனல் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் பார்த்திபன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் உருவாக்க வீடியோ குறித்து ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "வணக்கம் நண்பர்களே! இரவின் நிழல் படத்தின் making/documentary என் Radhakrishnan parthiban YouTube channel மூலமாக வெளியிட முடிவெடுத்திருக்கிறேன்.

புதிய channel என்பதால் பிரபலங்கள் மூலமாக பிரமாதமாக விளம்பரபடுத்தி வெளியிடலாம் என அறிவார்ந்தோர் கூறியதால் …. தோ… உங்கள் முன் அக்கோரிக்கையை வைக்கிறேன்.

முகவரியற்றிருந்த என்னை, வற்றியிருந்த என்னை பிரபலபடுத்தியதும் பலப்படுத்தியதும் நீங்கள் தானே! Content தான் ஈர்க்கவல்லது என்பதாலும், இரவின் நிழல் making உங்களின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாயிருப்பது என்பதாலும் தைரியமாக இம்முடிவிற்கு வந்திருக்கிறேன்.

பார்த்த சிலர் பார்க்கும்படி பலரிடம் கூற கூற,ஒரு சாதனை அரங்கேறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. நாளையே கூட இது நடைபெறும் உங்களின் ஆதரவோடு…நன்றியுடன், இராதாகிருஷ்ணன் பார்த்திபன்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Parthiban Iravin Nizhal Making Video Release Update

People looking for online information on Iravin nizhal, Iravin Nizhal Making Video will find this news story useful.