www.garudabazaar.com

"சிவா மனசுல சக்தி மாதிரி ஒரு படம் இது".. 'வரலாறு முக்கியம்' படம் பற்றி மனம் திறந்த ஜீவா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் சந்தோஷ் ராஜன் இயக்கியுள்ள திரைப்படம் “வரலாறு முக்கியம் “.

Jiiva Speech about Varalaru Mukkiyam Movie and SMS

ரொமான்ஸ் காமெடி ஜானரில் கம்ர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வினில் கலந்து கொண்டநடிகர் ஜீவா, "SMS படத்திற்கு பிறகு அது போன்று ஒரு படம் வேண்டும் என்று அனைவரும் என்னை கேட்டார்கள். அப்படி ஒரு படமாய் தான் இந்த வரலாறு முக்கியம் வந்துள்ளது. இந்த படத்தின் இயக்குனர் மிகவும்  அதிகமான காமெடி உணர்வு உள்ளவர். அது படத்திலும் பிரதிபலித்துள்ளது. கோவிட் காலகட்டத்தில் தான் இந்த படத்தை உருவாக்கினோம்.

Jiiva Speech about Varalaru Mukkiyam Movie and SMS

மக்கள் சந்தோஷமாக படம் பார்க்க வேண்டுமென இப்படத்தை உருவாக்கியுள்ளோம். ஹீரோயின் பிரக்யா மற்றும் காஷ்மீரா இருவருடன் பணியாற்றியது மகிழ்ச்சியை தருகிறது. காஷ்மீரா இதில் மலையாளம் கலந்த தமிழ் பேசி அசத்தியுள்ளார்.

பிரக்யாவை முன்னதாகவே சோஷியல் மீடியா மூலம் தெரியும். அவருடன்  பகிர்ந்துகொண்டதும், படபிடிப்பு தளத்திலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அனைவரது கூட்டு முயற்சியிலும் இந்த படம் உருவாகி உள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி. " என ஜீவா பேசினார்.

இத்திரைப்படத்தில், ஜீவா மற்றும் காஷ்மீரா பரதேசி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பிரக்யா நாக்ரா, VTV கணேஷ், K.S.ரவிக்குமார், மொட்ட ராஜேந்திரன், ஷாரா சரண்யா, டி எஸ் கே, சித்திக் மற்றும் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

"சிவா மனசுல சக்தி மாதிரி ஒரு படம் இது".. 'வரலாறு முக்கியம்' படம் பற்றி மனம் திறந்த ஜீவா! வீடியோ

Jiiva Speech about Varalaru Mukkiyam Movie and SMS

People looking for online information on Jiiva, Siva Manasula Sakthi, SMS, Varalaru mukkiyam will find this news story useful.