www.garudabazaar.com
iTechUS

பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நெல்லை தங்கராஜ் மரணம் : திரையுலகினர் இரங்கல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் மாரி செல்வராஜ் வெளியான முதல் படம் பரியேறும் பெருமாள்.

pariyerum perumal actor Nellai Thangaraj passed away

கதிர், ‘கயல்’ ஆனந்தி,  ‘பூ’ ராம், யோகிபாபு, மாரிமுத்து மற்றும் பலர் நடித்த இந்த படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் தெருக்கூத்துக்கலைஞர் நெல்லை தங்கராஜ்.

இவர் அப்படத்தில் நாயகன் பரியனின் தந்தையாக நடித்திருப்பார். படத்திலும் தெருக்கூத்து கலைஞராக வரும் இவர் மீது ஒடுக்கம் செலுத்தப்படுவதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அப்படி பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் தந்தையாக அறிமுகமான இவர் படத்தில் பெண் வேடமிட்டு நடிக்கும் தெருக்கூத்து கலைஞராக நடித்ததன் மூலம் புகழ்பெற்றார்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாக, நெல்லை தங்கராஜின் வறுமை நிலை கருதி, நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இணைந்து அவருக்கு புதிய வீடு கட்டி கொடுத்திருந்தது குறித்த செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் இவர் தற்போது உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது மறைவு செய்தியை அறிந்த திரையுலகினரும், ஏனைய கலைஞர்களும் இவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

pariyerum perumal actor Nellai Thangaraj passed away

People looking for online information on நெல்லை தங்கராஜ், Nellai Thangaraj, Pariyerum Perumal, Pariyerum perumal actor will find this news story useful.