'பரியேறும் பெருமாள்' பட பிரபலத்துக்கு திருமணம்... வெளியான செய்தி... வாழ்த்தும் ரசிகர்கள்..!
முகப்பு > சினிமா செய்திகள்கொரோனா ஊரடங்கு தளர்வையடுத்து பல பிரபலங்களும் தங்களது திருமணங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் பரியேறும் பெருமாள், குண்டு, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களுக்கு எடிட்டராக பணிபுரிந்த செல்வா ஆர்.கே தற்போது தனது திருமணத்தை பற்றி அறிவித்துள்ளார். இவருக்கு அனிதா என்பவருடன் இன்று திருமணம் நடைபெற உள்ளது.

சமீபத்தில் இவரது எடிட்டிங்கில் உருவான 'மூக்குத்தி அம்மன்' மற்றும் 'பிஸ்கோத்' படங்கள் இரண்டும் ஒரே நேரத்தில் ரிலீசாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்திற்கும் எடிட்டர் இவரே. அவர் கூறும்போது "இது நடந்து 10 ஆண்டுகள் ஆகிறது. என்னோடு கை கோர்த்து எனது வாழ்க்கையை தாங்கி வருகிறார். எனது காதலியை மணப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்களும் பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.