www.garudabazaar.com
iTechUS

"தி கிரேட் இந்தியன் கிச்சன்" இயக்குனருடன் காளிகாம்பாள் கோவிலில் தரிசனம் செய்த ஹன்சிகா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஆர்.கண்ணனின் படத்தில் நடித்த முடித்த கையோடு நடிகை ஹன்சிகா காளிகாம்பாள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.

Hansika visits Kaligambal Temple with Kanthari Director

இயக்குநர்  R.கண்ணன் இயக்கத்தில் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன் நடிப்பில் தமிழில் உருவாகும் இப்படத்தை இயக்குநர்  R.கண்ணன் தனது மசாலா பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். மலையாளத்தில் ஹிட் அடித்த இந்த படம் கிச்சனே வாழ்க்கையாகக் கொண்டு வாழப் பணிக்கப்படும் இந்திய சமூக பெண்கள் குறித்த விமர்சன பார்வையை எதார்த்த போக்கில் முன்வைக்கிறது.

இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில்தான், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராகுல் ரவிச்சந்திரன் நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 3-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனிடையே இப்படத்தின் இயக்குநர் ஆர்.கண்ணன், தனது மசாலா ஃபிக்ஸ் படம் நிறுவனம் சார்பில் தயாரித்து டைரக்ட் செய்து வரும் படம் “காந்தாரி”.இதில் நாயகியாக ஹன்சிகா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்  தனது டைரக்டர் ஆர்.கண்ணனை அழைத்து கொண்டு சென்னை காளிகாம்பாள் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டார் ஹன்சிகா.

Hansika visits Kaligambal Temple with Kanthari Director

இதற்கு முன் படபிடிப்பு ஆரம்பித்த அன்றும் இயக்குநர் ஆர்.கண்ணனுடன் சாமி கும்பிட்ட பிறகு தான் காந்தாரி படபிடிப்பில் நடிகை ஹன்சிகா கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Hansika visits Kaligambal Temple with Kanthari Director

People looking for online information on Aishwarya Rajesh, Hansika Motwani, R Kannan, The Great Indian Kitchen will find this news story useful.