www.garudabazaar.com

நடிகர் சோனு சூட்டுடன் இணைந்து காபி லேம் போட்ட ரீல்ஸ்.. குசும்புக்கார மனுஷன்😂..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்டுடன் இணைந்து காபி லேம் எடுத்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

Actor Sonu Sood and Khaby Lame New Reels Goes Viral

Also Read | "அசீம் குழந்தை மாதிரி".. பிக் பாஸ் வீட்டுக்குள் விக்ரமன் இப்டி தான்.. ராம் Exclusive!!

பஞ்சாப் மாநிலத்தில் 1973 ஆம் ஆண்டு பிறந்த சோனு சூட், பொறியியல் படித்துவிட்டு மாடலிங் துறைக்குள் கால்பதித்தார். 1999-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான "கள்ளழகர்" என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரைத்துறையில் நடிகராக சோனு சூட் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நெஞ்சினிலே, அருந்ததி, சந்திரமுகி ஆகிய படங்களின் மூலமாக மக்களிடையே பிரபலமானார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சோனு சூட், பிறருக்கு உதவுவதையும் தனது முக்கிய பணிகளில் ஒன்றாக செய்து வருகிறார்.

Actor Sonu Sood and Khaby Lame New Reels Goes Viral

இந்நிலையில், சோனு சூட் டிக்டாக் பிரபலமான காபி லேம் உடன் இணைந்து ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது செனகல் நாடு. அங்கே வறுமையான குடும்பத்தில் பிறந்தவர் காபி லேம். இவருடைய சிறு வயதிலேயே குடும்பம் இத்தாலிக்கு குடியேறியது. அங்கேயே படித்து வளர்ந்த லேம், 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தை அடைந்தபோது டிக் டாக்கில் வீடியோக்களை பகிர ஆரம்பித்தார். இன்றைய தேதியில் டிக்டாக் பக்கத்தில் அதிகமான மக்களால் பின்தொடரப்படும் நபராக காபி இருக்கிறார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டுடன் அவர் நடித்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இரண்டு கண்ணாடி கிளாஸ்களில் ஜூஸை ஊற்றுகிறார் சோனு சூட். அப்போது ஒரு கிளாசில் மட்டுமே ஜூஸ் நிறைகிறது. இதனையடுத்து, மீதமிருந்த சிறிய அளவு ஜூஸை தனக்கு எதிரே இருக்கும் கிளாசில் ஊற்றிக்கொள்கிறார் சோனு சூட்.

Actor Sonu Sood and Khaby Lame New Reels Goes Viral

அப்போது, ஜூஸ் குறைவாக ஊற்றப்பட்டிருக்கும் கிளாஸை நோக்கி காபி கை நீட்ட, ஜூஸ் நிறைந்திருக்கும் கிளாஸை எடுத்துக்கொள்ளும்படி கூறுகிறார் சோனு சூட். அப்போது, அவரது கையை உதறிவிடும் காபி, சோனுவின் கிளாசில் இருந்த ஸ்ட்ராவை எடுத்து முழுவதும் நிரப்பப்பட்ட கிளாசில் இருந்த ஜூஸை குடிக்கிறார். இதனால் சோனுசூட் அதிர்ச்சியடைகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Khaby Lame (@khaby00)

Also Read | வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா.. எப்போ? செம்ம அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!

தொடர்புடைய இணைப்புகள்

Actor Sonu Sood and Khaby Lame New Reels Goes Viral

People looking for online information on Khaby Lame, Khaby Lame New Reels, Sonu Sood, Sonu Sood and Khaby Lame New Reels will find this news story useful.