www.garudabazaar.com

பரபரப்பு!!.. பாலிவுட் நடிகர் சோனு சூட்-க்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இந்திய நடிகர் சோனு சூட் தமிழிலும், தென்னிந்திய சினிமாக்களிலும், இந்திய அளவிலும் அறியப்படுபவர்.

IT Raids Sonu Sood Locations சோனு சூட் ஐடி ரெய்டு

பாலிவுட் நடிகராக பரவலாக அறியப்படும் சோனு சூட் தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சென்ற ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியபோது, சொந்த ஊருக்கு போக முடியாமல் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே செல்ல வேண்டிய சூழல் உண்டானது.

அப்போது முதல் அவர்களுக்கு உதவி செய்தது, வேலையை இழந்த இளைஞர்களுக்கு உதவியது, ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுவோருக்கு உடனடியாக அவற்றை ஏற்பாடு செய்து உதவுவது என பல வகையிலும் தம்முடைய சமூக பங்களிப்பை சோனு சூட் தொடர்ந்து கொடுத்து வந்தார்.

IT Raids Sonu Sood Locations சோனு சூட் ஐடி ரெய்டு

அதன் பின்னர் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டும் நிகழ்ச்சிகளுக்கு விளம்பரத் தூதராக சோனு சூட்டை டெல்லி மாநில அரசு நியமித்தது. இந்நிலையில் தான், மும்பையில் உள்ள சோனு சூட்டுக்கு சொந்தமான ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் ஆய்வு  நடத்தியுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்துகிறது.

Also Read: "கொலை மிரட்டல் விடுத்த Ex காதலன்.. ஆசிட் ஊத்த ஆள் அனுப்பினாரு!".. BiggBoss நடிகை பரபரப்பு புகார்!

Tags : Sonu Sood

தொடர்புடைய இணைப்புகள்

IT Raids Sonu Sood Locations சோனு சூட் ஐடி ரெய்டு

People looking for online information on Sonu Sood will find this news story useful.