www.garudabazaar.com

Pandiyan Stores : காவ்யாவை தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸில் "புதிய முல்லை"..!! வெளியான எபிசோடு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுள் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முக்கிய சீரியலாக விளங்குகிறது.

Pandiyan Stores Mullai Kavya Arivumani Replaced by Lavanya

Also Read | GP Muthu : "தட்டிக்கேக்குற பொறுப்புல இருக்கீங்க தலைவரே..?" - GP முத்து -க்கு Bigg Boss பரபரப்பு அட்வைஸ்.!!

அண்ணன் தம்பிகளின் கதையையும் கூட்டு குடும்பத்தின் உன்னதத்தையும் பேசக்கூடிய இந்த கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்கிற மளிகை ஸ்டோர்ஸில் தொடங்கிய இவர்களுடைய பயணம் மற்றும் குடும்ப வாழ்க்கை முறையை சுற்றி இந்த திரைக்கதை நிகழ்கிறது.

மூர்த்தி, ஜீவா, கதிர், கண்ணன் ஆகிய நான்கு சகோதரர்களின் கதையான இந்த கதையில் முறையே மூர்த்தியின் மனைவி தனம் என்கிற கதாபாத்திரமும், ஜீவாவின் மனைவியாக மீனா என்கிற கதாபாத்திரமும், கதிர் என்கிற கதாபாத்திரத்தின் மனைவியாக முல்லை என்கிற கதாபாத்திரமும், கண்ணன் என்கிற கதாபாத்திரத்தின் மனைவியாக ஐஸ்வர்யா என்கிற கதாபாத்திரமும் மக்களிடையே மிகவும் பிரபலம்.

இதனிடையே அண்மை வாரத்தில், பாக்கியலட்சுமி சீரியலுடன் இணைந்து மகா சங்கமம் வாரமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பாகி வந்தது. அதன்படி பாக்கியலட்சுமி குடும்பத்தினரை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் ஒரு சுற்றுலா தளத்தில் சந்தித்து பொழுதை கழிக்கும் காட்சிகளை காண முடிந்தது.

முன்னதாக இதில் கதிரின் மனைவியாக முல்லை என்கிற கதாபாத்திரத்தில் மறைந்த நடிகை விஜே சித்ரா நடித்து வந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பதில் நடிகை காவியா அறிவுமணி இந்த பாத்திரத்தை ஏற்ற நடித்து வந்தார். தற்போது அவரும் மாற்றப்பட்டு இருக்கிறார். ஆம் தற்போது கதிரின் மனைவியாக புதிய முல்லை கதாபாத்திரத்தில் லாவண்யா நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அந்த எபிசோடு தற்போது ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான சிப்பிக்குள் முத்து சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் லாவண்யா.

கதிர் & முல்லை கதாபாத்திரங்களை பொறுத்தவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரிடமிருந்து பிரிந்து தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மீண்டும் தங்கள் குடும்பத்தினருடன் எப்போது சேருவார்கள் என்பதை நோக்கியும் கதை சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | "மைண்ட் வாய்ஸ்னு நெனைச்சு சத்தமா பேசிய Bigg Boss.?" - இத நோட் பண்ணீங்களா.. செம கலகலப்பு.. !!

தொடர்புடைய இணைப்புகள்

Pandiyan Stores Mullai Kavya Arivumani Replaced by Lavanya

People looking for online information on Kavya Arivumani, Lavanya, Mullai, Pandiyan Stores will find this news story useful.