Reliable Software
www.garudabazaar.com

சித்ராவை அடுத்து சினிமாவில் நடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸின் தற்போதைய முல்லை! ஹீரோ இவர்தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் காளிதாஸ் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் பரத் இந்தியில் சல்மான் கானுடன் இணைந்து ராதே எனும் படத்தில் நடித்திருக்கிறார்.

pandian Stores mullai Kavya joins in Bharath movie

இந்த படத்தை பிரபுதேவா இயக்கி இருக்கிறார். இந்த படம் வரும் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி வெளியாகவிருக்கிறது.  இதனைத் தொடர்ந்து தமிழில் பரத் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்றைய தினம் சென்னையில் தொடங்கியது.

இந்த படத்தில் பரத்துடன் நடிகை வாணி போஜன் நடிக்கிறார். திரில்லர் படமான இந்த படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா அறிவுமணி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்கும் இந்த திரைப்படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, தென்காசி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறுவதாக தெரிகிறது. இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக சுரேஷ் பாலா பணிபுரிகிறார். இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் ராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

முன்னதாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்துவந்த ‘மறைந்த’ நடிகை சித்ராவுக்கு  பல ஆண்டுகள் கழித்து ‘கால்ஸ்’ படத்தின் மூலம் சினிமா வாய்ப்பு கிடைத்தது. அந்த படமும் வெளியானது.

இந்நிலையில் அதே பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், அதே முல்லை கதாபாத்திரத்தில் நடித்துவரும் காவ்யாவிற்கும் சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது.

ALSO READ: "ARRக்கு ஹிந்தியில பேசுனா புடிக்காது!".. கலாய்த்த சிவாங்கி.. - ரஹ்மானின் வேறலெவல் பதில்!.. சிவாங்கியின் Fun Love ப்ரொபோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

pandian Stores mullai Kavya joins in Bharath movie

People looking for online information on Axess Film Factory, Bharath, Pandian stores, Vijay Television will find this news story useful.