www.garudabazaar.com

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் வெளியிட்ட போட்டோ... பேமஸ் விஜய் டிவி சீரியல்ல நடிச்சிருக்காரா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதில் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும், முக்கியமாக ஜோடிகளும் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளனர். தற்போது நிஜத்திலும் மீனாவிற்கு குழந்தை பிறந்திருப்பதால் இந்த ஜோடி தொடர்பான காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜீவா தற்போது தனது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் விஷயத்தை வெளியிட்டுள்ளார்

Pandiyan stores actor acted in the famous vintage serialபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் நடித்த பழைய சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட்க்கு தளபதி விஜய் வீட்டில் இருந்து சர்ப்ரைஸ் கால் ஒன்று வந்துள்ளது. விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி அவரை அழைத்து பாராட்டியுள்ளார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்திருந்தார். மேலும் 12 வருடங்களுக்கு முன்பாக அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பேமஸ் சீரியல் கனா காணும் காலங்கள் தொடரின் இரண்டாம் பாகத்தில் ஜீவா நடித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். இந்த செய்தியுடன் அப்போது எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

Pandiyan stores actor acted in the famous vintage serialபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் நடித்த பழைய சீரியல்

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Pandiyan stores actor acted in the famous vintage serialபாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் நடித்த பழைய சீரியல்

People looking for online information on Jeeva, Meena, Pandiyan Stores, Venkat will find this news story useful.