‘ராஜா ராணி’ சீரியல் ஜோடியை தொடர்ந்து திருமண பந்தத்தில் இணைந்த ‘பகல் நிலவு’ ஜோடி!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 12, 2019 02:46 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியலின் மூலம் பிரபலமானவர்கள் நடிகர் சயது அன்வர் மற்றும் சமீரா ஷெரிஃப் ஆகியோர் திருமணம் செய்துக் கொண்டனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த இருவரும், தங்களது காதல் குறித்து வெளிப்படையாகவே அறிவித்தனர். ரியல் காதலர்களான அன்வர், சமீரா இருவரும் இணைந்து நடித்த ‘பகல் நிலவு’ சீரியல் ஹிட்டான நிலையில், சில தவிர்க்க முடியாத காரணங்களால் ‘பகல் நிலவு’ சீரியலில் இருந்து இருவரும் விலகினர்.
இந்நிலையில், காதலர்களாக இருந்த அன்வர் - சமீரா ஜோடி ஹைதராபாத்தில் இஸ்லாமிய முறைப்படி இருவீட்டாரின் முன்னிலையில் நேற்று (நவ.11) திருமண பந்தத்தில் இணைந்தனர். ஆடம்பரம் இல்லாத எளிமையாக நடந்த இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டனர்.
சமூக வலைதளங்களில் ‘அன்வீரா’ என பிரபலமான இந்த ஜோடியின் திருமண புகைப்படங்களை அவர்களது ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். புதுமண தம்பதி அன்வர் - சமீரா ஜோடிக்கு வாழ்த்துக்கள்..!