இரண்டு மாத பெண் குழந்தையுடன் மலையேறிய சமீரா Video இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Oct 01, 2019 02:25 PM
ஹிந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்த சமீரா இறுதியாக கடந்த 2013ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘வரதநாயகா’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை சமீரா ரெட்டி, அதைத் தொடர்ந்து ‘அசல்’, ‘வெடி’, ‘வேட்டை’, ‘நடுனிசி நாய்கள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் இரண்டு மாத பெண் குழந்தையுடன் மலையேறியிருக்கிறார் சமீரா.
கர்நாடகாவில் உள்ள உயரமான சிகரம் என அழைக்கப்படும் முல்லயநாகிரி சிகரத்தில் ஏறியுள்ளார். கடல் மட்டத்தில் இருந்து 6300 அடி உயரம் கொண்ட இந்த சிகரத்தில் தனது இரண்டு மாத குழந்தையையும் சுமந்தபடி ஏறியிருக்கிறார் சமீரா.
இதுதொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள , இந்த மலை உச்சியில் தனது மகள் நைராவுடன் ஏறியதாகவும் மலை உச்சிக்கு செல்லும் முன்பாக பாதி வழியிலேயே மூச்சு திணறலால் நிறுத்தியதாக தெரிவித்துள்ளார்.