அடுத்த படத்தை லாக் செய்த அசோக் செல்வன்.. விஜய் சேதுபதி தூக்க ப்ளான் பண்ண பொண்ணுதான் ஹீரோயின்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அசோக் செல்வனின் அடுத்த படம் குறித்து பிரத்யேக தகவல்கள் தெரிய வந்துள்ளது. 

அசோக் செல்வனின் அடுத்த டார்கெட் இதுதான் | oh my kadavule ashok selvan's next movie details

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக கலக்கி வருபவர் அசோக் செல்வன். இவர் நடித்த பீசா 2, தெகிடி உள்ளிட்ட படங்கள் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. மேலும் அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. 

இந்நிலையில் அசோக் செல்வனின் அடுத்தப்படம் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. புதுமுக இயக்குநர் ஸ்வாதினி இயக்கவிருக்கும் படத்தில் இவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.   இத்திரைப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக, விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் ஹீரோயினாக நடித்த நிஹாரிக்கா கொனிடெல்லா நடிக்கிறார். மேலும் லியான் ஜேம்ஸ் இசையமைக்கும் இத்திரைப்படத்தை கேனன்யா ஃபிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

Entertainment sub editor