மணிரத்னத்தோடு ஷூட் ஸ்பாட்டில் எடுத்த பழைய புகைப்படத்தை பகிர்ந்த பிரபல நடிகை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து பல உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கும் நடிகை நித்யா மேனன்.  தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று கஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இவர் கால்பதிக்காத திரையுலகமே இல்லை.

Nithya Menon Shares O Kadhal Kanmani Shoot spot photo with Mani Rathnam in Instagram| நித்யா மேனன் மணிரத்னத்தோடு எடுத்த ஓ காதல் கண்மணி பட ஷூட்டிங்

இந்த ஆண்டு வெளியான சைக்கோ படத்தில் சவாலான கதாப்பாத்திரம் ஒன்றில் விளாசியிருந்த அவரை ’நடிப்பு ராட்சசி’ என்று மிஷ்கின் பல பேட்டிகளில் புகழாரம் சூட்டியுள்ளார்.

180 படம் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த அவர், வெப்பம், மாலினி 22 பாளயங்கோட்டை, ஜெகே எனும் நண்பனின் வாழ்க்கை ஆகிய படங்களில் நடித்துள்ளார். லிவ்-இன் வாழ்க்கையை மையப்படுத்தி மணிரத்னம் இயக்கிய ’ஓ காதல் கண்மணி’ இவருக்கும் பெரிய கவனத்தை ஏற்படுத்தி தந்தது.

இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓ காதல் கண்பணி பட ஷூட்டிங் இடைவேளையில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் நித்யா மேனனோடு மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், ஷாத் அலி இடம்பெற்றுள்ளார். நித்யா மேனன் லெஜண்டுகளோடு இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் லைக்-களை அள்ளி வருகிறது.

Entertainment sub editor