என்.ஜி.கே பாடல்கள் வெளியானது.. தெறிக்கவிடும் யுவன் மியூசிக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் டிரைலர் வெளியானதை தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியானது.

Selvaraghvan-Suriya's NGK Audio is releasing today at 4pm, Track list is here

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கியுள்ள ‘என்.ஜி.கே’ என்கிற ‘நந்த கோபாலன் குமார்’ திரைப்படம் வரும் மே.31ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கு இடையே இப்படத்தின் டிரைலர் நேற்று (ஏப்.29) வெளியானது. அரசியல் த்ரில்லர் ஜானரில் செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தின் டிரைலர் வரும் காட்சிகளும், அனல் பறக்கும் அரசியல் வசனங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

‘என்.ஜி.கே’ திரைப்படத்தின் டிரைலரை தொடர்ந்து அதன் இசை இன்று (ஏப்.30) மாலை 4 மணிக்கு அனைத்து தளங்களிலும் வெளியானது. ‘தண்டல்காரன்’, ‘திமிரனும்டா’, ‘அன்பே பேரன்பே’, ‘பொதைச்சாலும்’ ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இதில், ‘தண்டல்காரன்’ பாடல் ஏற்கனவே வெளியானது குறிப்பிடத்தக்கது.

அனல் பறக்கும் அரசியல் களத்தில் செல்வராகவன் - சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

என்.ஜி.கே பாடல்கள் வெளியானது.. தெறிக்கவிடும் யுவன் மியூசிக் வீடியோ