’கள்ள பாய்ஸ்…’ ஆஸ்காருக்கு போன படத்தை ’தில்’லாக கலாய்த்த பார்த்திபன்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 20, 2019 01:37 PM
பார்த்திபனின் இயக்கத்தில் ஒரே ஒரு கதாப்பாத்திரம் கொண்ட படமாக உருவான திரைப்பட ’ஒத்த செருப்பு சைஸ் 7’. இதில் அவரது நடிப்பும், இயக்கமும் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

இந்தியா சார்பில் இத்திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹிந்தியில் ரன்வீர் சிங், ஆலியா பட் நடித்த ‘கல்லி பாய்’ திரைப்படம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், ஆஸ்கார் விருது பட்டியல் அடுத்தடுத்து சுருக்கப்பட்டபோது ‘கல்லி பாய்’ ஆஸ்கர் வாய்ப்பை இழந்தது. இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டிருகும் பார்த்திபன்: "பிரிவினை இல்லாத இந்தியா வன்முறை கொள்ளாத இதயம் இதையே நாடும் நானும்,இந்த நாடும்!"சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்தப் படமாய் OS7 தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வில் என் முத்தாய்ப்பு செய்தி! இந்தியா தேர்ந்தெடுத்த'கள்ள பாய்ஸ்'ஆஸ்கரில் நிராகரித்து, OS7 தேர்வில் இருப்ப'தில்' பெருமிதம், என்று பதிவிட்டுள்ளார்.
"பிரிவினை இல்லாத இந்தியா
வன்முறை கொள்ளாத இதயம்
இதையே நாடும் நானும்,இந்த நாடும்!"சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்தப் படமாய் OS7 தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வில் என் முத்தாய்ப்பு செய்தி!
இந்தியா தேர்ந்தெடுத்த'கள்ள பாய்ஸ்'ஆஸ்கரில் நிராகரித்து, OS7 தேர்வில் இருப்ப'தில்' பெருமிதம் pic.twitter.com/lXGnHoHft5
— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 20, 2019