'நம்ம வீட்டுப் பிள்ளை'க்கு பிறகு தனுஷ் - மாரி செல்வராஜ் படத்தில் இணையும் பிரபல நடிகர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 16, 2019 10:57 AM
'அசுரன்', 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு பிறகு நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்துடன் நிறைவு பெறும் என அதன் தயாரிப்பாளர் சசிகாந்த் அறிவித்திருந்தார்.

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்க, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இதனையடுத்து 'பரியேறும் பெருமாள்' பட இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நடராஜன் சுப்ரமணியன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். சமீபத்தில் சிவகார்த்திகேயனுடன் நட்டி இணைந்து நடித்த 'நம்ம வீட்டுப் பிள்ளை' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.