‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கின் டிரைலர் இதோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டில் நடிகர் ஷாகித் கபூர் நடித்துள்ள ‘கபீர் சிங்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Shahid Kapoor's Kabir Singh, hindi remake of Arjun Reddy trailer is out now

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஹிந்தி ரீமேக்காக ‘கபீர் சிங்’ திரைப்படம் உருவாகியுள்ளது.

தெலுங்கில் ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தை இயக்கிய சந்தீப் வாங்காவே இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இதில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.

இந்த டிரைலரில், ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் இடம்பெற்ற காட்சிகளில் சில மாற்றங்கள் செய்து பாலிவுட் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஷாகித் கபூரின் முரட்டுத்தனமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்துள்ளது.

டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வரும் ஜூன் 21ம் தேதி ரிலீசாகவுள்ளது.

‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கின் டிரைலர் இதோ..! வீடியோ