சூர்யா என்னை இப்படி சொன்னா என்ன ஆகறது? - சமீரா ரெட்டி ஷாக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிந்தி, தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்த சமீரா இறுதியாக கடந்த 2013ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘வரதநாயகா’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

Varanam Aayiram heroine Sameera Reddy reveals that she was approached in many inappropriate ways

தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை சமீரா ரெட்டி, அதைத் தொடர்ந்து ‘அசல்’, ‘வெடி’, ‘வேட்டை’, ‘நடுனிசி நாய்கள்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு தொழிலதிபர் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், சமீரா தற்போது மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில், Behindwoods தளத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டார்.

அப்போது தனக்கு பிடித்தமான விஷயங்கள் பற்றி பேசிய அவர், ‘ஜாப்பானிய உணவு, ஷூ, போன்றவை மிகவும் பிடிக்கும். உடன் நடித்ததில் பிடித்த நடிகர்களை வரிசைப்படுத்த மாட்டேன். ஒருவேளை என்னை யாராவது குறைவாக மதிப்பிட்டால் எனக்கு கஷ்டமாக இருக்கும். இதுவே சூர்யா 8வது இடத்தில் தான் சமீராவை பிடிக்கும் என்றால் எனது இதயம் சுக்குநூறாகிவிடும். அதனால் கூறமாட்டேன். ஆனால் பிடித்த நடிகர் சூர்யா, பிடித்த படம் ‘வாரணம் ஆயிரம்’. என்னையும் சூர்யாவையும் வைத்து யாராவது ஏதாவது படம் பண்ணலாமே யாரும் பண்ண மாட்டேங்கிறாங்க’ என்றார்.

இதைத் தொடர்ந்து திரையுலகில் மாற்ற வேண்டிய விஷயம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சமீரா, பெண்களை கிளாமருக்காக மட்டும் பயன்படுத்தும் முறை மாற வேண்டும். என்னையும் தவறாக அணுகியுள்ளனர். அவர்கள் எதிர்ப்பார்ப்பதை விட பெண்களால் அதிகம் செய்ய முடியும். அதற்கான வாய்ப்புகளை கொடுத்தால் போதும். தற்போது அந்த மாற்றம் சிறிய அளவில் உருவாக தொடங்கியுள்ளது. திரையுலகம் மொத்தமும் மாறினால் நன்றாக இருக்கும்’ என கருத்து தெரிவித்துள்ளார்.

சூர்யா என்னை இப்படி சொன்னா என்ன ஆகறது? - சமீரா ரெட்டி ஷாக் வீடியோ