புதிய திரைப்பட ஒழுங்குமுறை சட்டத்தால் பரபரப்பு!.. தெலுங்கு பட தயாரிப்பாளர்களுக்கு சிக்கலா?
முகப்பு > சினிமா செய்திகள்ஆந்திராவில் அரசு சார்பில் மட்டுமே சினிமா டிக்கெட்டுகள் என்கிற பரபரப்பு திரைப்பட ஒழுங்குமுறை திருத்த சட்டம் அமலுக்கு வருவிருப்பதாக கூறப்படுகிறது.
ஆம், ஆந்திர அரசு இதற்கான பேரவை ஒப்புதலை பெற்றுளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இனி அரசு சார்புடைய சமூக வலை தளங்களில் குறிப்பிட்ட திரைப்படங்களுக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப் படவுள்ளதாகவும், ஒரு நாளைக்கு 4 காட்சிகள் திரையிடப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த கொரோனா சூழலில் மக்கள் டிக்கெட்டுகளை, அரசின் குறிப்பிட்ட இணையதளம் வாயிலாக பெறலாம் என்றும் இதனால், திரையரங்குகளுக்கு முன்பாக போக்குவரத்து பாதிப்பு குறையும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, இதன்மூலம் அதிக காட்சிகளை ஓட்டி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ய முடியாது என்று ஆந்திர திரைத்துறை தொடர்பான அமைச்சர் நானி தெரிவித்திருக்கிறார்.
ஆனால், தெலங்கானா, ஆந்திரா என இரு மாநிலங்களில் தெலுங்கு திரைப் படங்கள் திரையிடப் படுவதால், இந்த இரு மாநிலங்களிலும் திரைப்பட திரையிடலுக்கான இந்த முறைகள் வேறுவேறாக இருக்கும் பட்சத்திலும், திரைப்பட கட்டணங்கள் மாற்றங்களுடன் இருக்கும்போதும், தயாரிப்பாளருக்கு இந்த புதிய சட்டத்திருத்தம் நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறி வருகின்றனர்.
தெலுங்கில் மிக முக்கியமாக, தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய மற்றும் தென்னிந்திய ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் பிரம்மாண்ட திரைப்படங்களின் ரிலீஸ் அடுத்தடுத்து வருகின்றன.
அதன்படி, அல்லு அர்ஜூன் நடித்துள்ள புஷ்பா 1-ஆம் பாகம் டிசம்பர் 17-ஆம் தேதியும், “பாகுபலி” இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் ராம் சரண் & ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் ஆர்.ஆர்.ஆர் படம் ஜனவரி 7-ஆம் தேதியும், பிரஷாந்த் நீல் இயக்கத்தில் - யஷ் நடிப்பில் மெகா ஹிட் அடித்த கே.ஜி.எஃப் படத்தின் 2-ஆம் பாகம் ஏப்ரல் 14-ஆம் தேதியும் வெளியாகவுள்ளன. இந்த படங்களின் டிக்கெட்டுகளின் விலைகள் ஆந்திர அரசின் இணையதள டிக்கெட் விலைகளுக்குட்பட்டு விநியோகிக்க வாய்ப்பிருக்குமா? அதற்குள் இந்த சட்டத்திருத்தம் முழுமையாக அமல்படுத்தப்பட்டுவிடுமா என்று ஒரு புறம் பேசப்பட்டு வருகிறது.
இதனிடையே பிரபல தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அரசின் திரைப்பட ஒழுங்குமுறை தொடர்பான இந்த சமீபத்திய திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், நாடு முழுவதும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி இருப்பதை போன்று, திரைப்பட டிக்கெட்டுகளின் விலையும் நாடு முழுவதும் ஒரே மாதிரி இருத்தலின் அவசியம் குறித்தும் ஆந்திர அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Director Rajamouli RRR Movie Uyire Video Song Released
- Bahubali Rajamouli RRR Movie Next Single Song Update
- Clash Of Titans Yash KGF2 Vs Aamir Khan Laal Singh Chaddha
- Allu Arjun Pushpa The Rise Tamil Nadu Theatrical Rights
- Samantha Is Going To Groove For A Sizzling Number In Pushpa
- Raja Mouli Directorial RRR Movie's RRR Mass Anthem
- ROARING Glimpse Of Ram Charan & Jr NTR's RRR Is Mind Blowing
- Glimpse Of RRR Movie The Glory Of Indian Cinema
- Jr NTR Ram Charan RRR Movie Glimpse Will Be Released On
- KGF YASH Carrying The Body Of Puneet Rajkumar Appu
- Pushpa Movie 3rd Single Saamy Saamy Releaased
- Months After Accident, Yashika Posts Painful VIDEO Of Her Taking 'baby Steps' To Walk; Leaves Fans Emotional
தொடர்புடைய இணைப்புகள்
- SS Rajamouli: "தமிழ் மக்களே இந்த தடவை என்னை மன்னிச்சிடுங்க..", RRR
- BISEXUAL தமிழ் பெண்ணாக நடிக்கும் Samantha | Hollywood Debut 🔥
- Puneeth சமாதியில் YOGIBABU Emotional🥺
- நீங்க தான் அவர SUPER STAR ஆக்குனீங்க PUNEETH WIFE EMOTIONAL
- எப்படி ஒத்துக்கிட்டாங்க Samantha?.. முதல் முறையாக Pushpa-காக எடுத்த முடிவு
- 🔴 Puneeth, My Child.. ரெண்டு நாளா சொல்லாம மறச்சுட்டாங்கடா கண்ணா - வேதனையில் Rajini
- Puneeth இறப்பில் சந்தேகம், Hospital-க்கு படையெடுக்கும் ரசிகர்கள்
- 🔴Video: Puneeth கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்திய உதயநிதி Stalin
- 🔴"Puneeth இறந்து 11 நாளாச்சு, அதை இன்னமும் நம்ப முடியல"- Siddharth | Puneeth
- 🔴 Udhayanidhi Stalin At Puneeth Rajkumar's Memorial
- எனக்கு 4 மாசம், Puneeth-க்கு 7 மாசம்.. இவ்வளவு சீக்கிரம் விட்டு போயிட்டாரு- கண்கலங்கிய Suriya
- അമ്മയുടെ വയറ്റിൽ കിടക്കുമ്പോൾ തൊട്ടുള്ള ബന്ധമായിരുന്നു | Suriya's Emotional Words About Puneeth