Maha
www.garudabazaar.com

அடடே நஸ்ரியா நடத்துன போட்டோஷூட்.. அதுலேயும் ரசிகர்களிடம் அவங்க கேட்ட கேள்வி செம ஹைலைட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நஸ்ரியா  நடத்திய  LATEST போட்டோ ஷூட் போட்டோக்கள்  வெளியாகி உள்ளன.

Nazriya Nazim Latest Photoshoot Images with Freckle Skin

Also Read | பிரபல OTTயில் ரிலீசாகும் "ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்".. ரிலீஸ் எப்போ? முழு தகவல்

அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் 2013 ஆம் ஆண்டு வெளியான நேரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா நசீம். குழந்தை நட்சத்திரமாக நடித்து ஏற்கனவே கேரளா முழுவதும் அறியப்பட்டவர் தான் நஸ்ரியா.

தமிழில், ராஜா ராணி, நையாண்டி, வாயை மூடிபேசவும், திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

Nazriya Nazim Latest Photoshoot Images with Freckle Skin

நஸ்ரியாவுக்கு என்றே தமிழ் சினிமாவில் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. முன்னணி நடிகையாக வலம் வந்த போதே நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் சினிமாக்களில் நடிக்காமல் இருந்த நஸ்ரியா, சில ஆண்டுகளுக்கு முன் மலையாள படங்களில் நடிக்க துவங்கினார். இதில் பகத் பாசில் கூட நடித்த ட்ரான்ஸ் படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தற்போது இந்த படம் நிலை மறந்தவன் என்ற பெயரில் தமிழில் வெளி வந்துள்ளது.

Nazriya Nazim Latest Photoshoot Images with Freckle Skin

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா, அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்கள், குடும்பத்தினர், நண்பர்கள் உடன் இருக்கும் புகைப்படங்கள், கணவர் பகத்துடன் பயணம் செய்யும் புகைப்படங்களை பதிவேற்றுவார்.

Nazriya Nazim Latest Photoshoot Images with Freckle Skin

அதேபோல் தற்போது பிரபல ஃபேஷன் டிசைனர் ரெஹானா பஷீர் உடன் இணைந்து நடத்திய LATEST போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். காவி நிற ஆடையில் நஸ்ரியா இந்த போட்டோக்களில் காட்சியளிக்கிறார்.

Nazriya Nazim Latest Photoshoot Images with Freckle Skin

மேலும் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி "தோலில் ஏற்படும் கரும்புள்ளிகளை விரும்புவீர்களா?  விரும்பமாட்டிங்களா?" என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகின்றன.

Also Read | சாய் பல்லவி நடித்த கார்கி படத்தின் சேட்டிலைட் உரிமம்.. கைப்பற்றிய பிரபல டிவி சேனல்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Nazriya Nazim Latest Photoshoot Images with Freckle Skin

People looking for online information on Nazriya nazim, Nazriya Nazim Latest Photoshoot will find this news story useful.