www.garudabazaar.com

அட்லீ - ஷாருக் இணையும் Pan India படத்தில் பிரபல ‘மாஸ்’ தமிழ் ‘ஹீரோயின்’?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் முன்னணி இயக்குனர் அட்லீ. ஆர்யா - நயன் தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படம் தொடங்கி பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அட்லீ, விஜய் நடிப்பில் மூன்று திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

nayanthara to be act in atlee SRK pan india here is what we know

தெறி, மெர்சல், பிகில் என விஜய் நடிப்பில் அட்லீ இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே ஹிட் அடித்தன. இதில் ராஜா ராணி போலவே, அட்லீ இயக்கிய பிகில் திரைப்படத்திலும் நயன்தாரா நடித்து இருந்தார்.

nayanthara to be act in atlee SRK pan india here is what we know

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அட்லீ, பாலிவுட்டில் ஷாருக் கானை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. பின்னர் இந்த தகவல்கள் ஏக அளவில் உறுதி செய்யப்பட்டன. இதனிடையே ஷாருக் கான் மேனேஜருக்கு அட்லீ முக கவசத்தை பரிசாக அளித்து இருந்த தகவலும் வைரலாகியது. இந்த நிலையில்தான் ஷாருக்கான் அட்லி இணையும் புதிய படத்தில் நயன்தாரா நாயகியாக நடிப்பார் என்று பேசப்பட்டு வந்திருந்தது.

தற்போது அந்த தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களால் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆம், அட்லீ இயக்கத்தில் ஷாருக்குடன் இணைந்து நடிப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. எனினும் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களுக்கு காத்திருக்கலாம்.

nayanthara to be act in atlee SRK pan india here is what we know

நெற்றிக்கண், காத்துவாக்குல இரண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் நயன்தாரா, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: APP மூலம் ஆபாச படமா?.. ஷில்பா ஷெட்டியின் கணவர் அதிரடி கைது! புகார் கொடுத்த நடிகை இவரா?

தொடர்புடைய இணைப்புகள்

nayanthara to be act in atlee SRK pan india here is what we know

People looking for online information on Atlee, Atlee Kumar, Bigil, Nayanthara, Shah Rukh Khan, Vijay will find this news story useful.