www.garudabazaar.com

தளபதி விஜய்-யின் 'Beast' 3வது கட்ட ஷூட்!.. இந்தா வந்துருச்சுல்ல அடுத்த அப்டேட்!..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிக்கும் திரைப்படம் தளபதி65.

Thalapathy Vijay Beast movie 3rd schedule update

தளபதி விஜய்-யின் 65வது திரைப்படமான இந்த படத்துக்கு அண்மையில் தான் Beast என பெயரிடப்பட்டது. அத்துடன் கைகளில் துப்பாக்கி வைத்துக்கொண்டு விஜய் போஸ் கொடுக்கும் பட்டாசான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே குஷியை ஏற்படுத்தின.

அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைப்பயிற்சி அளிக்கின்றனர். ஜானி மாஸ்டர் நடனப் பயிற்சி அளித்து வருகிறார். முன்னதாக பீஸ்ட் படத்துக்கான நடன ஒத்திகை தொடங்கிவிட்டதாக நாயகி பூஜா ஹெக்டே பதிவிட்ட புகைப்படம் ட்ரெண்ட் ஆனது. 

Thalapathy Vijay Beast movie 3rd schedule update

சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலான Beast படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புக்காக முன்னதாக நடிகர் விஜய் ஜார்ஜியா சென்ற புகைப்படங்கள் வைரலாகி வந்தன. அதன் பிறகு இந்த படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இதற்காக பூஜா ஹெக்டே சென்னை வருகை தந்த புகைப்படங்களும் வைரலாகின.

இந்நிலையில் இந்த படத்தின் 2-ஆம் கட்டப் படப்பிடிப்பு ஜூலை 20 நடப்பதாகவும், ஆகஸ்டு 1-ஆம் தேதி முதல் இந்த படத்தின் 3-வது கட்டப் படப்பிடிப்பு தொடங்கப்படுவதாகவும் நமக்கு நம்பத் தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Thalapathy Vijay Beast movie 3rd schedule update

இதனிடையே Beast பட ஷூட்டிங்கிற்கு, 'சர்தார்' பட கெட்டப்பில்  விஜயை சந்திக்க வந்த நடிகர் கார்த்தியை, தளபதி விஜய்க்கு அடையாளமே தெரியாமல் போன, சுவாரஸ்யமான சம்பவமும் வைரலாகியுள்ளது.

ALSO READ: 'சர்தார்' கார்த்தி-ஐ பாத்து 'தளபதி' விஜய்க்கு அடையாளமே தெரியலயா?  ஷூட்டிங் ஸ்பாட்டில் சுவாரஸ்யம்!

தொடர்புடைய இணைப்புகள்

Thalapathy Vijay Beast movie 3rd schedule update

People looking for online information on Anbariv, Anirudh, BeastUpdate, BeastVijay, Jani Master, Nelson Dilipkumar, Pooja Hegde, Thalapathy65, Thalapathy65Update, ThalapathyVijay, Vijay will find this news story useful.