www.garudabazaar.com

ஸ்ரீகாந்த் நடிக்கும் ‘எக்கோ’ திரைப்படம்!.. ஹீரோயின் இவர் தான்!!.. வெளியான ‘டீசர்’ அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'எக்கோ' படத்தின் டீசர் வெளியீடு பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

Srikanth vidya pradeep echo movie teaser update

ஸ்ரீகாந்த், வித்யா பிரதீப், பூஜா ஜாவேரி ஆகியோரது நடிப்பில் உருவாகும் படம் ‘எக்கோ’. காளி வெங்கட், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். சீரியல்களில் தோன்றிவந்த வித்யா பிரதீப் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 

சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை டாக்டர்.ராஜசேகர், ஹாரூன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, அறிமுக இயக்குநர் நவீன் கணேஷ் இயக்குகிறார்.

நரேன் பாலகுமார் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை ஏக்நாத் எழுதுகிறார். ‘கில்லி’, ‘தூள்’, ‘தடம்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சுதர்ஷன் படத்தொகுப்பு செய்ய, மைக்கேல் ராஜ் கலை இயக்குநராக பணியாற்றுள்ளார். ராதிகா நடன பயிற்சிகளை அளிக்க, டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டீசரை ஜூலை 23 மாலை 5 மணிக்கு நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் பார்த்திபன் வெளியிடுகின்றனர். இதனிடையே இப்படத்தின் நிறைவுப்பணிகள் நடந்துகொண்டிருப்பதாகவும் விரைவில் படம் வெளியாவது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் இயக்குநர் நவீன் கணேஷ் தெரிவித்துள்ளார். 

ALSO READ: வில்லனுடன் ‘மாஸ்’ ஆக்‌ஷன் காட்சி.. விஷால்-க்கு அடிபட்டு காயம்! வெளியான பரபரப்பு வீடியோ!

Srikanth vidya pradeep echo movie teaser update

People looking for online information on Echo, ECHOthemovie, Radhakrishnan Parthiban, Srikanth, Vidya Pradeep, Vijay Antony will find this news story useful.