www.garudabazaar.com

"கர்ணன்"லயே மிரட்டுனாரே!.. நட்டி-யின் 'புதிய' சைக்கோ திரில்லர் படம்! பூஜையுடன் தொடங்கிய ஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.

natty natraj new psycho thriller movie shoot started

நடிகர் நட்டி தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கேரக்டர்கள் என எல்லாவற்றிலும் பட்டையை கிளப்பக் கூடியவர். இவர் நடித்த ‘சதுரங்க வேட்டை’ கேரக்டரில் தொடங்கி, கர்ணனின் ‘கண்ணபிரான்’ எனும் கேரக்டர் வரை நட்டி நடிப்பினை பாராட்டாதவர்கள் இல்லை.

நடிகர் நட்டி நடிக்கும் சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். 'ட்ரீம் ஹவுஸ்' சார்பில் வி.எம். முனிவேலன் தயாரிக்கும் 'ட்ரீம் ஹவுஸ் ப்ரொடக்ஷன் நம்பர் .1' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

படத்தில் நான்கு நாயகிகள் நடிக்கிறார்கள்.  நாயகிகள் தேர்வு நடைபெற்று வருகிறது. படத்தின் முக்கிய வேடங்களில் 'பிளாக் ஷீப்' நந்தினி மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் ஆரி நடித்துள்ள ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ படத்தின் நாயகி சாஷ்வி பாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார். கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு படத்தொகுப்பை சுதர்சன் மேற்கொள்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை அருண் ஏற்க, இந்த படத்தின் நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றுகிறார்.

ALSO READ: ‘டாணாக்காரன்’ பட இயக்குநரை பாத்துருக்கீங்களா?.. ‘அசுரன்’ படத்தில் மிரட்டலா வருவாரே!

மேலும் செய்திகள்

natty natraj new psycho thriller movie shoot started

People looking for online information on Haroon, Karthik Raja, Natty Natraj will find this news story useful.