நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘சிந்துபாத்’ திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை தொடர்ந்து அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சிந்துபாத்’ திரைப்படத்தை கே புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும், முக்கிய வேடத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் நடித்துள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இப்படத்தின் டீசர், டிரைலர்களும் வெளியானது. இப்படத்தில் விஜய் சேதுபதியும், சூர்யா சேதுபதியும் இணைந்து அசால்ட்டாக ஆட்டய போடும் பெட்டி கேஸ் திருடர்களாக நடித்துள்ளனர். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு குறிப்பிட்ட டெசிபல் அளவில் மட்டுமே காது கேட்கும், அதனால் நடக்கும் சுவாரஸ்யங்களும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பற்றியும் இப்படத்தில் பேசப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இந்நிலையில், சென்சாருக்கு அனுப்பப்பட்ட இப்படத்தில் எந்த காட்சிகளையும் நீக்காமல் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் ஜூன்.21ம் தேதி ரிலீசாகிறது.
#Sindhubaadh certified U/A.#SindhubaadhFrom21stJune@yoursanjali @thisisysr @KProductionsInd @VANSANMOVIES @ClapboardPr @mounamravi @onlynikil @Muzik247in@CtcMediaboy pic.twitter.com/DtuARVa0EM
— VijaySethupathi (@VijaySethuOffl) June 18, 2019