மூக்குத்தி அம்மனாக பக்தகோடிகளுக்கு தரிசனம் தந்த நயன்தாரா - என்னவொரு கண்கொள்ளா காட்சி
முகப்பு > சினிமா செய்திகள்'எல்கேஜி' படத்துக்கு பிறகு என்ஜே சரவணனுடன் இணைந்து ஆர்ஜே பாலாஜி இயக்கி, நடித்து வரும் படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்த படத்தில் மூக்குத்தி அம்மனாக நயன்தாரா நடித்துள்ளார்.

வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. டீஸரில் அம்மன் கெட்ட அப்பில் நயன்தாரா அருள் தருகிறார். இந்த படத்துக்கு ஆர்.ஜே.பாலாஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.
‘அவள்’ மற்றும் நயன்தாரா தற்போது நடித்து வரும் 'நெற்றிக்கண்' படங்களின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
'தானா சேர்ந்த கூட்டம்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் கிருஷ்ணன் கேமராவைக் கையாள, ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை அமைக்கிறார். 'பரியேறும் பெருமாள்' படப்புகழ் ஆர்.கே.செல்வா படத்தொகுப்பை கவனிக்கிறார்.
Firstlook of #MookuthiAmman ..! 🔥🔥🔥#Nayanthara #MookuthiAmmanFL pic.twitter.com/fEWRtbMdLW
— RJ Balaji (@RJ_Balaji) February 29, 2020