ஜீவா - ராஜூ முருகனின் ஜிப்ஸி டீஸர் இதோ - ''இந்தியா தான் எங்க நாடு, நீங்க என்ன லூசா ?''
முகப்பு > சினிமா செய்திகள்'சீறு' படத்துக்கு பிறகு ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள 'ஜிப்ஸி' திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை 'குக்கூ', 'ஜோக்கர்' படங்களின் இயக்குநர் ராஜூமுருகன் இயக்கியுள்ளார். இத்தகைய காரணங்களால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. டீஸரில் படத்தின் ஹீரோயின் நடாஷா சிங், ''இந்தியா தான் எங்காளுங்க, இது எங்க நாடு, நீங்க என்ன லூசா?'' என்று வசனம் கேட்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இது தற்போதைய நிகழ்வுகளை நினைவுபடுத்தும் விதமாக உள்ளது.
இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடாஷா சிங் நடிக்க, சன்னி வெய்ன், லால் ஜோஸ், சுஷீலாம் ராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, செல்வகுமார் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்துக்கு சென்சாரில் A சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பாக எஸ்.அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.
ஜீவா - ராஜூ முருகனின் ஜிப்ஸி டீஸர் இதோ - ''இந்தியா தான் எங்க நாடு, நீங்க என்ன லூசா ?'' வீடியோ