''ஒரு சின்ன இடைவெளிக்கு அப்புறம்..'' - நாயகி வித்யா வெளியிட்ட க்ளாசிக் போட்டோஸ்.
முகப்பு > சினிமா செய்திகள்நாயகி சீரியலில் நடித்த வித்யா ப்ரதீப் தனது க்ளாசிக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நாயகி சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் வித்யா ப்ரதீப். இதுமட்டுமின்றி இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பசங்க-2, களரி உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், தடம் படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து அசத்தினார். மேலும் இவர் செல் ஆராய்ச்சி குறித்தும் படித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகை வித்யா ப்ரதீப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கருப்பு வெள்ளையில் எடுத்த அவர் க்ளாசிக் புகைப்படங்களை பதிவிட்டு, 'ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு வந்திருக்கிறேன். நீங்கள் எல்லோரும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பீர்கள் என நம்புகிறேன்' என அவர் பதிவிட்டுள்ளார். வித்யா ப்ரதீப்பின் இந்த பதிவு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Tags : Vidya Pradeep, Thadam, Nayagi