நாயகி வித்யாவுக்கு இப்போது இதுதான் வேலை.! ஊரடங்கு நேரத்தில் தொடரும் ஆராய்ச்சி.!
முகப்பு > சினிமா செய்திகள்நாயகி சீரியல் வித்யா தற்போது தனது செல் ஆராய்ச்சிக்கான பணிகளில் இறங்கியுள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் குறித்த அச்சம் பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவிலும் அது எதிரொலித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு ஊர்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் யாரையும் அவசியமில்லாமல் வெளியில் வர வேண்டாம் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாயகி சீரியலில் நடித்து வரும் வித்யா ப்ரதீப், வீட்டில் இருக்கும் நேரத்தை உபயோகமாக செலவிட்டு வருகிறார். ஸ்டெம் செல் ஆராய்ச்சியை மேற்கொண்டு வரும் அவர், இந்த ஊரடங்கு நேரத்தில், மீதமிருக்கும் பணிகளை முடிப்பதில் இறங்கியிருப்பதாக பதிவிட்டுள்ளார். நாயகி சீரியலில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர், பசங்க-2, களறி, தடம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
Trying to finish all the pending works #ilovemyjob 🙈 pic.twitter.com/dR1YjwbT04
— Vidya Pradeep (@Vidya_Off) March 28, 2020