www.garudabazaar.com

தேசிய விருது பெற்ற நடன இயக்குநர்.. திடீர் மறைவால் ரசிகர்கள் சோகம்.! - திரைத்துறையினர் இரங்கல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தேசிய விருது பெற்ற மூத்த நடன இயக்குநர் காலமாகியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேசிய விருது பெற்ற மூத்த நடன இயக்குநர் காலமானார் | National Award Winning Choreographer Saroj Khan Passed Away

பாலிவுட்டில் முன்னணி நடன இயக்குநராக கலக்கியவர் சரோஜ் கான். 1980-களில் இவர் நடனம் அமைத்த பாடல்கள் எல்லாம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தன. மேலும் இவர் தமிழில் ரஜினி நடித்த தாய் வீடு, மணிரத்னம் இயக்கிய இருவர், சிருங்காரம் உள்ளிட்ட படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ளார். சிருங்காரம் படத்திற்காக இவர் சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் சரோஜ் கானுக்கு சுவாவச கோளாறு இருப்பதாக, அவரை அண்மையில் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனிடையே இன்று அவர், மாரடைப்பின் காரணமாக காலமாகியுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இன்று அவரின் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. இதை தொடர்ந்து திரைத்துறையினரும் ரசிகர்களும் சரோஜ் கான் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் அக்‌ஷய் குமார் தனது இரங்கல் பதிவில், ''சரோஜ் கான், நடன ஸ்டெப்களை ஈசியாக மாற்றியவர்'' என புகழாரம் சூட்டியுள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தேசிய விருது பெற்ற மூத்த நடன இயக்குநர் காலமானார் | National Award Winning Choreographer Saroj Khan Passed Away

People looking for online information on Choreographer, Passed away, Saroj Khan will find this news story useful.