www.garudabazaar.com
iTechUS

Christopher : ”கிறிஸ்டோபர்” படத்தின் ரிலீஸ்.. மணல் காட்டில் களமிறங்கிய மம்மூட்டி - ஐஸ்வர்யா லெஷ்மி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் & மலையாள சினிமாவில் கதாநாயகியாக பிரபலமானவர்  ஐஸ்வர்யா லக்ஷ்மி.

Mammootty Aishwarya Lakshmi Christopher Movie Dubai Promotion

Images are subject to © copyright to their respective owners.

Also Read | சாக்லேட் செய்யும் விஜய்.. Thalapathy 67 அட்டகாசமான டைட்டில் ப்ரோமோ ! LEO - Bloody Sweet

மாயநதி, வரதன் உள்ளிட்ட மலையாள திரைப்படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி, விஷால் நடிப்பில் வெளிவந்த  'ஆக்சன்' படம் மூலம் தமிழிலும் அறிமுகம் ஆகியிருந்தார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஜகமே தந்திரம், கார்கி, பொன்னியின் செல்வன் முதல் பாகம், கட்டாகுஸ்தி உள்ளிட்ட திரைப்படங்களிலும் ஐஸ்வர்யா லெஷ்மி நடித்திருந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஏற்று நடித்த "பூங்குழலி" கதாபாத்திரத்திற்கு பிறகு அவரை பலரும் பூங்குழலி என்றே குறிப்பிட்டு அழைத்து வருகின்றனர். சமீபத்தில் அவர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்த 'கட்டா குஸ்தி' படத்திலும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பு பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றிருந்தது.

Mammootty Aishwarya Lakshmi Christopher Movie Dubai Promotion

Images are subject to © copyright to their respective owners.

ஐஸ்வர்யா லெஷ்மி, மம்மூட்டி நடிப்பில் உருவாகி உள்ள கிறிஸ்டோபர் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்காக படக்குழுவினர் பல்வேறு ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக துபாயில் நடக்கும் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் ஐஸ்வர்யா லெஷ்மி & மம்மூட்டி கலந்து கொள்கின்றனர். இதனை முன்னிட்டு பாலைவனத்தில் மம்மூட்டி உடன் சேர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஐஸ்வர்யா லெஷ்மி பகிர்ந்துள்ளார். "நானும் மம்முக்காவும் மணல் காட்டில்" என தலைப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Also Read | தளபதி விஜய் நடிக்கும் "LEO".. முக்கிய பண்டிகை தினத்தை முன்னிட்டு ரிலீஸ்! செம்ம தேதி!

தொடர்புடைய இணைப்புகள்

Mammootty Aishwarya Lakshmi Christopher Movie Dubai Promotion

People looking for online information on Aishwarya Lekshmi, Christopher Movie, Mammootty will find this news story useful.