Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

'நானே வருவேன்' படத்திற்கு கிடைத்த வரவேற்பு.. செல்வராகவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தாணு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க செல்வராகவன் இயக்கத்தில் கலைப்புலி S தாணு வழங்கும் வீ கிரியேஷன்ஸ் தயாரிப்பில் "  நானே வருவேன்"  திரைப்படம் உலகமெங்கும் நேற்று ( வியாழக்கிழமை ) வெளிவந்தது.

Nane Varuven Producer kalaipuli Thanu Meet Director Selvaraghavan

Also Read | பொன்னியின் செல்வன் படத்தின் FDFS.. ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் படம் பார்த்த ஜெயம் ரவி!

இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மேயாத மான், மெர்குரி படங்களில் நடித்த நடிகை இந்துஜா  நடிக்கிறார். மேலும் ஒரு ஹீரோயினாக ஸ்வீடன் நடிகை Elisabet Avramidou Granlund நடித்துள்ளார். இவர் தமிழில் Paris Paris படத்திலும் நடித்துள்ளார்.

இந்த படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Nane Varuven Producer kalaipuli Thanu Meet Director Selvaraghavan

இந்த படத்திற்கு கிடைத்த பத்திரிகை ,ஊடக , ரசிகர்கள் பாராட்டுகளுடன்

வெற்றி நடை போடுகிறது.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் நேரில் சென்று இயக்குனரை சந்தித்து ஆளுயர மாலை அணிவித்து மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும்  தெரிவித்துக்  கொண்டார்.

Nane Varuven Producer kalaipuli Thanu Meet Director Selvaraghavan

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை பிரபல முன்னணி சேனலான சன் டிவி கைப்பற்றி உள்ளது என்றும், டிஜிட்டல் ஒடிடி உரிமத்தை பிரபல அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது  என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Nane Varuven Producer kalaipuli Thanu Meet Director Selvaraghavan

இந்த படத்திற்கு புவன சுந்தர் எடிட்டராகவும், விஜய் முருகன் கலை இயக்குனராகவும், திலீப் சுப்பராயன் சண்டை வடிவமைப்பாளராகவும்,   ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Also Read | பஹத் பாசில் & அபர்ணா நடிக்கும் புதிய PAN INDIA படம்.. இயக்குனர் இவரா? செம்ம COMBO ஆச்சே இது!

தொடர்புடைய இணைப்புகள்

Nane Varuven Producer kalaipuli Thanu Meet Director Selvaraghavan

People looking for online information on Dhanush, Kalaipuli S Thanu, Nane Varuven, Nane Varuven Producer, Selvaraghavan will find this news story useful.