Naane Varuven D Logo Top
PS 1 D Logo Top
www.garudabazaar.com

Ponniyin Selvan : "பாகுபலிக்கும் பொன்னியின் செல்வனுக்கும் என்ன வித்தியாசம்?" - இயக்குநர் மணிரத்னம் Exclusive

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.

How Ponniyin Selvan differs with Bahubali Maniratnam exclusive

Also Read | நந்தினி, குந்தவைக்கு நிகராக பூங்குழுலிக்கும் ஆர்மி.. களைகட்டும் PS1 கதாபாத்திரங்கள்.!

சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்  கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தை செப்டம்பர் 30-ஆம் தேதி லைகா புரொடக்‌ஷன்ஸ் பிரம்மாண்டமாக பன்மொழிகளில் வெளியிட்டுள்ளது.

How Ponniyin Selvan differs with Bahubali Maniratnam exclusive

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பேட்டி அளித்த இயக்குநர் மணிரத்னத்திடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

கேள்வி: இப்போது இருக்கும் மக்களுக்கு ஒரு சரியான ஒப்பீடாக பாகுபலியை கருதுகிறார்கள். ஒரு திரைப்படம் வரலாற்றை பற்றி எடுக்கும் பொழுது பாகுபலி திரைப்படத்தை ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்கிறார்கள். அதில் இருப்பது போல் போர்க்காட்சிகள் இருக்கின்றனவா? பிரம்மாண்டம் இருக்கின்றனவா? என்பது போல் ஒப்பிட்டு பார்த்துக் கொள்கிறார்கள். இந்த ஒப்பீடு பற்றி?

How Ponniyin Selvan differs with Bahubali Maniratnam exclusive

இயக்குநர் மணிரத்னம் பதில் : பொன்னியின் செல்வன் என்பது ராஜராஜ சோழன் பற்றிய கதை. தமிழ் நாட்டில் மிகச் சிறந்த அரசராக இருந்தவர். அவரைப் பற்றி திரைப்படம் எடுக்கும் பொழுது நேர்மையாகவும் எதார்த்தமாகவும் எடுக்க வேண்டியது இருக்கிறது. சுற்றி இருக்கும் அனைத்து கேரக்டர்களும் ரியஸ்டிக்காக இருக்க வேண்டும். இந்த கதை சொன்ன அனைத்துமே வந்தியதேவன் பார்வையில்தான் விரியும். நம்மை போல வந்தியத்தேவன் ஒரு சாமானிய மனிதன். எனவே இது ஒரு எதார்த்தமான படைப்பு, பாகுபலி அளவுக்கு இதில் பேண்டஸி அளவுகோல் இருக்காது. சூப்பர் ஹீரோ விஷயங்கள் இருக்காது. இன்னும் எளிமையாகவும் எதார்த்தமாகவும் இருக்கவே செய்யும். இசை ஆகட்டும், லொகேஷன் ஆகட்டும், விஷுவல் ஆகட்டும், எல்லாமே அப்படித்தான் இருக்கும். இதில் அழுக்கு இருக்கும். சகதி இருக்கும். இதில் நாம் முயற்சித்து இருப்பது ஒன்றே ஒன்றுதான். அந்த காலத்து கதையை சொல்கிறேன் என்பது இல்லாமல் கல்கி மாதிரியே அந்த காலத்து கதை சொல்லும்போது ஆடியன்சை அந்த காலத்துக்குள் அழைத்து செல்ல வேண்டும்.

How Ponniyin Selvan differs with Bahubali Maniratnam exclusive

ஆகவே கதை அந்த காலத்தில் நிகழ்வதாக இருக்க வேண்டும். எனவே என்னைப் பொறுத்தவரை பொன்னியின் செல்வன் மற்றும் பாகுபலி இரண்டுமே ஹிஸ்டாரிக்கல் திரைப்படங்கள். ஆனால் பாகுபலி முழுமையாக ஃபேண்டசி மற்றும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட படைப்பு என்றால், பொன்னியின் செல்வன் மனிதர்களுக்கிடையே நிகழும் எமோஷனல் கூறுகளை கொண்டு ரியலிஸ்டிக்காக உருவாக்கப்பட்டுள்ள ஹிஸ்டாரிக்கல் டிராமா.

Also Read | பஹத் பாசில் & அபர்ணா நடிக்கும் புதிய PAN INDIA படம்.. இயக்குனர் இவரா? செம்ம COMBO ஆச்சே இது!

PONNIYIN SELVAN : "பாகுபலிக்கும் பொன்னியின் செல்வனுக்கும் என்ன வித்தியாசம்?" - இயக்குநர் மணிரத்னம் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

How Ponniyin Selvan differs with Bahubali Maniratnam exclusive

People looking for online information on Ponniyin Selvan 1, Ponniyin Selvan part 1, Ponnyin Selvan, PS1 will find this news story useful.